Saturday Dec 28, 2024

நவகிரகங்களும் அடங்கியதுதான் திருப்பதி தரிசனம் திருப்பம் ஏற்படுவதும் இதனால்தான்!

திருப்பதிக்கு சென்று பாலாஜியை வணங்கி வந்தால் திருப்பம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அது எப்படி என பலருக்கு கேள்வி எழுந்திக்கும்… #நவகிரகங்களின் வழிபாட்டுடன் கூடியதே திருப்பதி தரிசனம் என்பதை விரிவாக பார்ப்போம்…

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என முன்னோர்கள் சொல்வதுண்டு. அது எப்படி திருப்பதி எம்பெருமானை தரிசித்து வந்தால் நம் வாழ்க்கையில் திருப்பம் நிகழ்கிறது என பலரும் சிந்திப்பதுண்டு.

திருப்பதி கோயில் என்பது நாம் பொதுவாக பெருமாள் கோயிலாக மட்டும் தெரியும். ஆனால் அது ஒரு நவகிரகங்களை உள்ளடக்கிய கோயிலாக அமைந்து நம் வாழ்க்கையில் நவகிரக தோஷங்களைப் போக்கும் விதமாக அமைந்ததனால் தான் திருப்பதி கோயில் திருப்பங்களைத் தரக் கூடியதாக உள்ளது.

நவகிரக தொடர்பு

திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய வேண்டுமென்றால் முதலில் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்து மலை மீது ஏறி, முடி காணிக்கை கொடுத்து கூட்டத்தில் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து, லட்டு எனும் பிரசாதம் பெற்று வருவது வழக்கம்.

அதாவது திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்யும் முன், #சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து, அதன் பின்னர் #ராகுவின் வடிவமான மலை மீது ஏறி திருமலை அடைந்து, #கேது எனும் நம் தலை முடியை காணிக்கையாக (பரிகாரமாக) தந்து, #சனி எனும் பக்தர்கள் கூட்டத்துடன் கூட்டமாக நின்று, #செவ்வாயாக திகழும் காவலர்களை கடந்து, பக்தி எனும் #குருவை மனதில் நினைத்து, #புதனின் அம்சமான பெருமாளை தரிசித்து வெளியே வரும் போது #சூரியன் எனும் ஆத்ம பலம் பெற முடியும். அதன் பின்னர் #சுக்கிரன் எனும் லட்டு கிடைக்கும்.

கிரகங்கள் தரும் பலம்

சந்திரன் ராகு பகை கிரகங்கள் என்பதால், திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்வதற்கு முன்னர் சந்திர அம்சமான பத்மாவதி தாயாரை திருப்பத்தில் முதலில் தரிசனம் செய்து, மன பலத்துடன் ராகு மலை ஏறி, கேதுவை நீச்சப்படுத்தும் விதமாக பூர்வ ஜென்ம கர்மா, விரக்தி, தடை ஆகியவற்றை நீச்சப்படுத்த நம் தலை முடியை இறக்குகிறோம்.

கர்மா என்ன என தெரியாதது போல், சுவாமி தரிசனம் செய்ய கூட்டத்தோடு, கூட்டமாக எவ்வளவு நேரம் ஆகும் என தெரியாமல் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்ய செல்லும் போது, காவலர்களான செவ்வாயை வைத்து சோதனை செய்த பின்னர், குரு எனும் பக்தி மனதுடன் சென்றால், புத்தி காரகன் புதன் எனும் வெங்கடாஜலபதியை தரிசனம் கிடைக்கும்.

வளர்பிறையில் நீர் பொங்கியும், தேய் பிறையில் குறையும் அதிசய கிணறு கொண்ட #திருமாந்துறை அட்சயநாதசுவாமி கோயில்

அப்படி மனோ பலமும், புத்தி பலமும் பெற்று சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்றும், அதன் பின்னர் அவரின் ஆசியுடன் சுக்கிரன் எனும் செல்வத்தை உண்டலில் காணிக்கையாக சேர்த்து மனம நிறையும் போது நம் வயிறு பசியாறவும், பிரசாதமாகவும் நவகிரக கலவையாக அன்னம் உடன் பின், சுக்கிரன் எனும் லட்டு கிடைக்கும். இவைகளே லட்சுமி கடாட்சமாக மாறுகிறது.

இதன் காரணத்தால் தான் நமக்கு #திருப்பதி கோயிலுக்கு சென்று வந்தால் திருப்பம் ஏற்படுவதாக ஐதீகம்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top