Sunday Dec 22, 2024

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருவட்டத்துறை-606 111 திருவரத்துறை, கடலூர் மாவட்டம். போன் +91-4143-246 467

இறைவன்

இறைவன்: தீர்த்தபுரீஸ்வரர், ஆனந்தீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி, ஆனந்த நாயகி

அறிமுகம்

திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

வெள்ளாற்றின் கரையில் உள்ள ஆதித்துறை(காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவட்டத்துறை (திட்டக்குடி) திருநெல்வாயில் அரத்துறை, திருக்கரந்துறை எனும் ஏழு துறைத்தலங்களுள் இது முக்கியமான தலம். இந்த ஏழு புண்ணியத்துறைகளில் மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏழு துறைகளையும் சப்தரிஷிகள் பூஜை செய்ய வேண்டி “நீவா’ என்று அழைத்ததாக ஐதீகம். இதுவே நீவா-வடவெள்ளாறு நதியாக மாறியது என்றும் கூறுவர். இது கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது. வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தர் பெண்ணாடகம் பிரளயகாலேஸ்வரரை தரிசித்து விட்டு, இத்தலம் வர விரும்பி வழியில் உள்ள மாறன்பாடி தலத்தில் தங்கினார். சம்பந்தர் வரும் வழியில் ஏற்பட்ட வருத்தத்தை கண்ட சிவன், அவர் செல்ல முத்துச்சிவிகையும், முத்துகொண்டையை தந்தருளினார்.

நம்பிக்கைகள்

வேண்டியதை எல்லாம் கொடுத்தருளும் இறைவன்.இங்கு கோயில் கர்ப்பகிரகத்திற்கு இடப்புறம் “மகம் வாசல்’ என்ற வாசல் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு கோயில் கர்ப்பகிரகத்திற்கு இடப்புறம் “மகம் வாசல்’ என்ற வாசல் உள்ளது. கணவனை இழந்த பெண்கள் ஒரு வருடம் ஆன பிறகு அருகில் உள்ள ஆற்றில் குளித்து விட்டு மகம் வாசல் வழியாக வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு அதன் வழியே சென்றுவிடுவர்.

திருவிழாக்கள்

நவராத்திரி, கந்தசஷ்டி, சிவராத்திரி.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கடலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top