Sunday Dec 22, 2024

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் திருக்கோவில், சிவகங்கை

முகவரி

அருள்மிகு சௌமிய நாராயணப்பெருமாள் கோவில் திருப்பத்தூர் ரோடு சிவகங்கை, திருகோஷ்டியூர் – 630 210.

இறைவன்

இறைவன்: சௌமிய நாராயணர் இறைவி: திருமாமகள் நாச்சியார்

அறிமுகம்

திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வருவாய் வட்டத்தில் திருகோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மூலவர் பெயர் சௌமிய நாராயணன்; தாயார் மகாலட்சுமி.இக்கோவிலில் மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம். திருமண தடை நீங்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்

புராண முக்கியத்துவம்

பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களை காக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். சுவாமியும் அவர்களது கோரிக்கையை ஏற்றார். இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார் மகாவிஷ்ணு. அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப்போவதாக கூறினார் மகாவிஷ்ணு. மகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிற கோலங்களையும் காட்டும்படி வேண்டினர். சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் “திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது. இந்த முறை அடியேன் ராமானுஜன், தங்கள் தாசன். என்னை ஆசிர்வதித்து மந்திரோபதேசம் அருள வேண்டும் என்று நம்பியிடம் வேண்டினார் ராமானுஜர். ராமானுஜரின் பணிவு நம்பியைக் கவர்ந்தது. அவரை தனியாக அழைத்துச்சென்ற நம்பி, இந்த எட்டெழுத்து மந்திரத்தை நீ உபதேசம் பெற்றபின் யாருக்கும் அறிவிக்கவோ, உபதேசம் செய்யவோ கூடாது. என் கட்டளையை மீறினால், நீ நரகம், செல்வாய் என்ற கண்டிப்புடன் உறுதிமொழி பெற்றபின், ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜரின் காதில் உபதேசித்தார். ராமானுஜரை ஆசிர்வதித்த நம்பி, என் கட்டளையை மீறாதே -இது வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் மந்திரம். மிக ரகசியமானது என்று அறிவுரை கூறி விடையளித்தார். நம்பியிடம் மந்திரோபதேசம் பெற்றதும், ராமானுஜர் உடலில் புதிய ஒளி தென்பட்டது. அந்த மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே வந்தவர் தன்னுடன் வந்த இரு சீடர்களைப் பார்த்து புன்னகைத்தார். எதிரே சவுமியநாராயணன் கோயில் தெரிந்தது. அங்கு சென்று கோயிலிருக்கும் அனைத்து தெய்வங்களையும் வழிபட்டவர், அருகே இருந்த தீர்த்தக்கிணறான சிம்மக்கிணறைக் கண்டு எட்டிப்பார்த்தார். அதிலிருந்த நீரில் மகாவிஷ்ணு காட்சி தந்தார். கைகூப்பி வணங்கினார் ராமானுஜர். உடனிருந்த சீடர்களான முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோருக்கு குருநாதரின் செயல் வியப்பைத் தந்தது. அங்கிருந்து புறப்பட்ட ராமானுஜர் கோயில் கோபுரத்தின் மேல் ஏறி அதன் உச்சியிலிருந்து ஊர் மக்களைக்கூவி அழைத்தார். அனைவரும் அங்கே கூடினார்கள். அவர்கள் முகங்களில் ஒருவித அச்சம் தெரிந்தது. இந்த முறையும் நம்பி இவருக்கு மந்திரோபதேசம் செய்யாமல் விரட்டிவிட்டதால் விரக்தியடைந்தது, கீழே விழுந்து உயிர்விடத் துணிந்துவிட்டாரோ என்று அங்கு கூடியிருந்த மக்கள் கிசுகிசுத்தார்கள். மக்கள் கூட்டத்தைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். அன்பார்ந்த பக்தர்களே நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். என் உபதேசம் வருங்காலத்தில் நீங்கள் வைகுண்டம் செல்ல வழிவகுக்கும் என்று அறைகூவல் விடுத்தவர் ஓம் நமோ நாராயணாய என்று மூன்றுமுறை கூறினார். கோபுரத்தின்கீழ் கூடியிருந்த மக்கள் அணைவரும் அந்த எட்டெழுத்து மந்திரத்தை மூன்றுமுறை கூறினார்கள். குருநாதர் வாக்கை மீறியதற்காக தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை; உலக மக்கள் அனைவரும் இந்த நாராயணமந்திரத்தை அறிந்துகொண்டு நற்கதி பெற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய புரட்சிகரமான – அக்காலத்தில் எவரும் சிந்திக்க அஞ்சும் செயலைச் செய்தார் ராமானுஜர் இப்படிப்பட்ட புனித நிகழ்வு நடந்த திருத்தலம் திருக்கோட்டியூர். இந்த விளக்குப் பரிகார வழிபாட்டில் கலந்து கொள்ள இயலாதவர்கள் இக்கோயிலில் அருள்புரியும் சந்தான கோபாலகிருஷ்ணர் சன்னிதிமுன் விளக்கேற்றி அர்ச்சனைசெய்து வழிபட்டபின், அந்த விளக்கை வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜைசெய்து வந்தாலும் காரிய சித்தி உண்டாகும்; வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம். திருக்கோட்டியூர் சவுமிய நாராயணர் கோயிலுள்ள சிம்மக்கிணறு புகழ்பெற்றது. நவகோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புரூருவன், அசுர சக்கவர்த்தியாகத் திகழ்ந்தவன். ஒருசமயம் அவன், திருக்கோட்டியூருக்கு வந்தபோது மாசி மக நன்னாள் வந்தது. அத்திருநாளில் கங்கையில் நீராடி மகாவிஷ்ணுவை தரிசிக்க எண்ணியிருந்தான். அது நடவாமல் போகவே மகாவிஷ்ணுவை மனமார வேண்டினான். அவனது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வந்தது. அதன் நடுவே மகாவிஷ்ணு அவனுக்குக் காட்சி தந்தார். தற்போது சிம்மக்கிணறு என்று சொல்லப்படும் அது கோவில் பிராகாரத்தில் அமைந்துள்ளது. இது மகாமகக்கிணறு என்றும் போற்றப்படுகிறது. இந்தக் கிணற்றுத் தீர்த்தத்தில் மாசிமகத்தன்று நீராடி, சவுமிய நாராயணப் பெருமாளை தரிசித்தால் நைமிசாரண்யம் தலத்தில் தவம் செய்த பயனும், கங்கை நதியில் நீராடி முக்தியடைந்த பயனும், குரு க்ஷேத்திரத்தில் கடுகளவு தங்கம் தானம் செய்த பயனும் கிட்டுமென்று தலபுராணம் கூறுகிறது.

நம்பிக்கைகள்

திருமண தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு வேண்டிக்கொள்ளலாம்.

சிறப்பு அம்சங்கள்

சவுமிய நாராயணர்: சுவாமியுடன் ஸ்ரீதேவி, பூதேவி மட்டுமின்றி மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு “பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், அப்பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.மகாவிஷ்ணு இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த சவுமிய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்திருக்கிறார். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது. விளக்கு நேர்த்திக்கடன்: தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். “ஓம்’, “நமோ’, “நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு. இக்கோயிலில் விளக்கு நேர்த்திக்கடன் பிரசித்தி பெற்றது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின், வீட்டிற்கு கொண்டு செல்கின்றனர். பின் அவ்விளக்கில் காசும், துளசியும் வைத்து, சிறு பெட்டியில் வைத்து மூடி பூஜையறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவர்கள் மாசி தெப்ப திருவிழாவின்போது இந்த விளக்குடன் மற்றொரு நெய் விளக்கை தீர்த்த கரையில் வைத்து வழிபடுகின்றனர். அந்நேரத்தில் புதிதாக வேண்டுதல் செய்பவர்கள் இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர். மகாமக கிணறு: புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தை திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புருரூபர். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை நதி பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். 12 வருடங்களுக்கு ஒருமுறை மகாமக விழாவின்போது, சுவாமி கருட வாகனத்தில் இங்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்கிறார். ராமானுஜருக்கு உபதேசம்: இவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யாரான ராமானுஜர் வந்தார். நம்பியின் இல்லத்திற்கு சென்ற அவர் வெளியில் இருந்து அழைத்தார். நம்பி, “யார்?’ என்று கேட்க, “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்றார். நம்பி வீட்டிற்குள்ளிருந்தே, “நான் செத்து வா!’ என்றார். புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார். இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலை சொன்னார். அடுத்த முறை சென்ற ராமானுஜர் “அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அவரை அழைத்த நம்பி, “ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசம் செய்தார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், மீறி சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.ஆனால், ராமானுஜரோ உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார். கோபம் கொண்ட நம்பி, ராமானுஜரை கடிந்து கொண்டார். அவரிடம் ராமானுஜர் பணிவாக, தனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்! என்றார். மகிழ்ந்த நம்பி “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.ராமானுஜர் மந்திர உபதேசம் செய்த விமானத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு நேரே நம்பியின் வீடு இருக்கிறது. இந்த வீடு “கல்திருமாளிகை’ என்றழைக்கப்டுகிறது. இக்கோயிலில் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனி சன்னதிகள் இருக்கிறது.

திருவிழாக்கள்

மாசியில் தெப்பத்திருவிழா, வைகுண்டஏகாதசி, நவராத்திரி.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கோஷ்டியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top