Saturday Dec 28, 2024

ஜமால் கார்ஹி புத்த மடாலயம், பாகிஸ்தான்

முகவரி

ஜமால் கார்ஹி புத்த மடாலயம், ஜமால் கார்ஹி, மர்தான், கைபர் பக்துன்க்வா, பாகிஸ்தான்

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

ஜமால் கார்கி என்பது வடக்கு பாகிஸ்தானின் மகாணமான கைபர் பக்துன்குவாவில் உள்ள மர்தானில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பண்டைய காந்தாரப் பண்பாட்டுக்குரிய களம் ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தின் இப்பகுதியில் புத்த மதம் செழிப்புற்றிருந்த காலத்தில், கிபி முதலாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை ஜமால் கார்கி, பௌத்த விகாரையாக இருந்தது. இங்கே ஒரு அழகிய துறவி மடமும், முதன்மைத் தாதுகோபமும் அதைச் சூழச் சிறிய சைத்தியங்களும் நெருக்கமாக அமைந்திருந்தன. ஜமால் கார்கியின் அழிபாடுகள் 1848ம் ஆண்டில், பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவரால் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தாது கோபுரம், கர்னல் லும்சுடன் என்பவரால் வெளிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அக்காலத்தில் பெறுமதியான எதுவும் கிடைக்கவில்லை. 1871ல் இக்களம் லெப்டினன்ட் குரொம்டன் என்பவரால் அகழ்வாய்வு செய்யப்பட்டபோது, பெருந்தொகையான புத்தர் சிலைகள் கிடைத்தன. இவை இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்திலும், கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியகத்திலும் உள்ளன. இக்களத்தில் கரோசுட்டி மொழிக் கல்வெட்டு ஒன்றும் கிடைத்தது. இது இப்போது பெசாவர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காலம்

5 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) – பாகிஸ்தான்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மர்தான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஹவேலியன்

அருகிலுள்ள விமான நிலையம்

பெஷாவர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top