Friday Dec 27, 2024

சோழம்பேட்டை அழகியநாதர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி

சோழம்பேட்டை அழகியநாதர் சிவன் கோயில், சோழம்பேட்டை, மயிலாடுதுறை மாவட்டம் – 609003.

இறைவன்

இறைவன்: அழகிய நாதர் இறைவி: தர்மசம்வர்த்தினி

அறிமுகம்

மயிலாடுதுறை-கல்லணை சாலையில் நான்காவது கிமீ-ல் உள்ளது சோழம்பேட்டை. இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. 1.தான்தோன்றீஸ்வரர் 2.அழகியநாதர். பிரதான சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஆனந்தகுடி சாலையில் சென்று முதல் இடது திருப்பத்தில் திரும்பி சிறிது தொலைவு சென்று பின் வலது தெருவில் திரும்பினால் அழகியநாதர் திருக்கோயிலை அடையலாம். கிழக்கு நோக்கிய கோயில், முழுமையும் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளதால் காலப்போக்கில் மிகவும் சிதிலம் அடைந்துள்ளது. அறுநூறு ஆண்டுகள் பழமையான கோயில். புருஷாமிருகம் வழிபட்டு பேறு பெற்ற தலம். மயிலாடுதுறையின் துலாகட்ட முழுக்கில் கலந்து கொள்ளும் மூர்த்திகளில் இந்த அழகியனாதரும் ஒருவர். ஆதலால் சப்தஸ்தான தலங்களில் ஒன்று. மிக சிறந்த இக்கோயில் தற்போது குடமுழுக்கு கண்டு இருபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன என அங்குள்ள சுவர் எழுத்துக்கள் சொல்கின்றன.

புராண முக்கியத்துவம்

முகப்பில் கோபுரமோ சுதை வாயிலோ காணப்படவில்லை, உள்ளே நுழையும் நம்மை சிறு மாடத்தில் இருந்தவாறு வரவேற்கிறார் கொடிமரவிநாயகர், கொடிமரமில்லை, நந்தி சிறிய மண்டபத்தில் இருந்தவாறு இறைவனை மூச்சுக்காற்றில் தாலாட்டியபடி இருக்கிறார். உள்ளே இறைவன் அழகிய நாதர் கிழக்கு நோக்கியபடி நடுத்தர அளவிலான லிங்க வடிவில் அழகாக உள்ளார். மகாமண்டபமாக ஒரு கூம்பு வடிவ மண்டபம். உள்ளது. இடைநாழியாக சிறு மண்டபம் முன்காலத்தில் உற்சவர்கள் வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறைவனின் தென்புறம் உள்ள மண்டபம் இடிந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன் இருவருக்கும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. இறைவனின் இடப்புறம் அம்பிகை தர்மசம்வர்த்தினி கிழக்கு நோக்கி உள்ளார்.அருகில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் அபூர்வ காட்சியாக தெற்கு நோக்கிய பைரவர் தனி சிற்றாலயத்தில் இருந்து அருள் பாலிப்பதை கண்டு வணங்கலாம். தெற்கு நோக்கிய பைரவர் நமக்கு துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் நொடிப்பொழுதில் நீக்க வல்லவர். மேற்கு நோக்கிய மண்டபத்தில் இரண்டு நாகர் சிலைகளும், சனி பகவானும் உள்ளனர் அடுத்து புருஷா மிருகமும், பீமனுடன் புருஷாமிருகம் சண்டையிடுவதை போன்ற சிற்பமும் உள்ளது. ஆளுயரத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சூரியனும், பாலமுருகனும், இரு சம்பந்தர் சிலைகளும் உள்ளன. இதனால் சம்பந்தர் பாடிய வைப்பு தலமாக இது இருக்கலாம் # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோழம்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top