Saturday Dec 21, 2024

சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சிறுவங்குளம் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், மடையம்பாக்கம், செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305.

இறைவன்

இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி : அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

காஞ்சிபுரம் வட்டத்தில் செய்யூர் தாலுக்காவிலுள்ள சிறுவங்குளம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இது செய்யூரிலிருந்து 8கி.மீ. தூரத்தில் உள்ளது. 1000 ஆண்டு பழமையான இக்கோவில் நவாப் காலத்துக்கோவிலாகும். வெட்டவெளியில் இருந்து தற்சமயம் ஷீட்போட்டு கடந்த ஒரு வருடகாலமாக பூஜை நடந்துவருகிறது. கோச்சங்க நாயனார் திருக்கூட்டம் ஷெட் போட்டுள்ளார்கள். வெளிப்பக்கத்தில் சோமஸ்கந்தரும் அவர்களை சுற்றி தேவகணங்கள் நந்தியம் பெருமாள் உள்ளனர். அதேப்போல் வடக்குப்பக்கத்தில் மூன்று புடைப்புச்சிற்பம் உள்ளது. கிராமக்கோவிலான இக்கோவில் ஏழுமலை என்னும் அர்ச்சகரால் பூஜைகள் இருவேளை நடக்கிறது. பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிறுவங்குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top