Monday Dec 23, 2024

சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோயில்,

சிங்கம்புணரி,

திருப்புத்தூர் தாலுகா,

சிவகங்கை மாவட்டம் – 630 502.

போன்: +91- 98650 62422

இறைவன்:

சேவுகப் பெருமாள்

அறிமுகம்:

சேவுக பெருமாள் ஐயனார் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரியில் அமைந்துள்ள உள்ளூர் கிராம தெய்வமான அய்யனாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிங்கம்புணரியில் உள்ள முக்கியமான கோவில்களில் இதுவும் ஒன்று. கடந்த காலங்களில், சத்தியத்தை உறுதிப்படுத்துவதற்காக சத்தியம் செய்யப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும். சுயம்பு என்று அழைக்கப்படும் சுயம் பிரகாசரும் இங்கு இருக்கிறார். இயற்கையாக உருவான சிவலிங்கம் பிரதான சன்னதியின் இடதுபுறத்தில் அமைந்துள்ளது. சிங்கம்புணரியின் புகழ்பெற்ற பிடாரி மைய சன்னதியின் வலதுபுறம் சன்னதி உள்ளது.

ஸ்ரீ சேவுகப் பெருமாள் அய்யனார், சிங்கம்புணரியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எம்.சூரக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சிரை மீட்ட அய்யனார், ஸ்ரீ சேகுட்டையனார் கோயில்கள் போன்ற சிங்கம்புணரியைச் சுற்றியுள்ள அனைத்து அய்யனார்களுக்கும் சகோதரனாகக் கருதப்படுகிறார். அந்த கோயில்கள் சேவுக மூர்த்தி அய்யனாருடன் பல வழிகளில் தொடர்புடையவை. ஸ்ரீ சேவுக மூர்த்தி அய்யனாருக்கு 10 நாட்கள் திருவிழாவை முடித்த பிறகு, மலை, சந்தானம், ஸ்ரீ சீரை மீட்ட அய்யனார், ஸ்ரீ சேகுட்டையனார் கோயில்களுக்கு “புரவி ஏழு திருவிழா”க்காக கொண்டு வரப்படுகிறது, இது மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிகவும் பிரபலமானது.

புராண முக்கியத்துவம் :

       பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது.வியப்படைந்த வேடுவன், “சேவுகபெருமாளே! மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்,” என்றதுடன், “”பெருமாளே” என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர், “சேவுகப்பெருமாள் அய்யனார்’ என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

நம்பிக்கைகள்:

கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், ராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

சிறப்பு அம்சங்கள்:

சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாக பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்: தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்க கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

அய்யனாரைப் போல அய்யப்பனும் ராகு , மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்வீ றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்றுபுகழ் பெற்று விளங்குகின்றன.

மலையாளமும், தமிழகமும்: முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும் இருவரும் ஈன்றமகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோயில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான்.சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை.அய்யனைப் போல அய்யனாரும் வீராவீ சனமாகவே வீற்வீ றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார்.தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.

தலவிருட்சம் : இத்திருக்கோயில் அமைந்த இடம் வில்வவனமாகியபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவார தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.

தல தீர்தீத்தம் : இத்திருக்கோயிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும்.

திருவிழாக்கள்:

வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சிங்கம்புணரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top