Tuesday Dec 24, 2024

சாஞ்சி ஸ்தூபி எண் 3, மத்திய பிரதேசம்

முகவரி

சாஞ்சி ஸ்தூபி எண் 3, சாஞ்சி, மத்திய பிரதேசம் – 464661

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கிமு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன. சாஞ்சி ஸ்துபா 3, சாஞ்சி ஸ்துபா 1க்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஸ்துபா மீது அரை வட்ட வடிவம் கொண்ட மண்டபம் போன்ற ஒரு கிரீடம் காணப்படுகிறது. இந்த ஸ்துபாக்காள் உலகின் மிகப் பழைய கற்கட்டடங்களாகக் கருதப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி மெளரிய அரசர்களால் ஆளப்பட்டுவந்தது. மௌரிய வம்சத்தின் தலைசிறந்த அரசரான அசோகர், கலிங்கப் போருக்குப் பின் புத்த மதத்தைத் தழுவினார். புத்தரின் தத்துவங்களைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் பரப்புவதற்கும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவற்றில் ஒன்றுதான் சாஞ்சி ஸ்தூபி. மிகப் பழமையான கல்லில் அமைக்கப்பட்டது. யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. அசோகரின் மனைவி தேவி, குன்றுகளின் மேலுள்ள அழகான இந்த நகரத்தில் ஸ்தூபி கட்ட முடிவு செய்தார். அவரின் மேற்பார்வையில் முதல் ஸ்தூபி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டது. மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்களும் அவர்களுக்குப் பின்வந்த அரசர்களும் மேலும் பல ஸ்தூபிகளைக் கட்டினர். கி.பி. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.

காலம்

3 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

போபால்

அருகிலுள்ள இரயில் நிலையம்

போபால்

அருகிலுள்ள விமான நிலையம்

போபால்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top