கோல்லதகுடி (கோல்லதா) சமண கோயில், தெலுங்கானா
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/gollathagudi-gollatha-jain-temple-telangana.jpg)
முகவரி
கோல்லதகுடி (கோல்லதா) சமண கோயில், அம்மபள்ளே, கோலதகுடி, மகாபூப்நகர் மாவட்டம் தெலுங்கானா 509301
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர், மஹாவீரர்
அறிமுகம்
ஆல்வன்பள்ளி (கோலதக்குடி) கிராமம் ஜாத்செர்லா மண்டல் தலைமையகத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், மகாபூப்நகர் மாவட்ட தலைமையகத்திலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டம், ஆல்வன்பள்ளி, (கோலதக்குடி) கிராமத்தில் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண கோயில் அமைந்துள்ளது. சுண்ணாம்பு பூசப்பட்ட பெரிய அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு அரிய கோயில் உள்ளது. கோலதக்குடியில் அருகிலுள்ள அகழ்வாராய்ச்சிகள் மூலம் ஆரம்பகாலத்தைச் சேர்ந்த இந்து ஆலய எச்சங்களைத் தவிர சமண மதத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. சமண சிற்பங்கள் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பிற பொருள்களைப் பாதுகாப்பதற்காக மாவட்ட அருங்காட்சியகம், பிள்ளலமரி, மகாபூப்நகர் மற்றும் மாநில அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு மாற்றப்பட்டன.
புராண முக்கியத்துவம்
இது 7 – 8 ஆம் நூற்றாண்டுக்கு சொந்தமான செங்கல் கோயிலாகும். இது கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் மேல்கூரையின் அலங்காரங்களை தக்க வைத்துக் கொண்ட சமண மதக்கோவிலாகும். இக்கோவிலை இடிபாடுகள் கொண்ட செங்கல் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள் அமராவதி பள்ளியின் சுண்ணாம்பு கலையின் தொடர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜாட்செர்லா மண்டல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஹைதராபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
ஹைதராபாத்