Saturday Dec 21, 2024

கூவத்தூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி

கூவத்தூர் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், (பரிகார தலம்) கூவத்தூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603305.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் இறைவி : ஸ்ரீ மரகத வல்லி

அறிமுகம்

ஸ்ரீ தேவி பூதேவி சமேதராய் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் ஸ்ரீ வேத கோஷர் எனும் மகரிஷிக்கு தரிசனம் தந்து அருளிய தலம். மிகவும் தொன்மை வாய்ந்த இத்திருக்கோயில் முற்றிலும் சிதைந்துபோய் சமீபத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீ மரகத வல்லி தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். துவாரபாலர்கள் மற்றும் அஷ்ட கோஷ்டங்களுடன் விநாயகர், பன்னிரு ஆழ்வார்கள், சக்கிரதாழ்வார், ஆண்டாள் , நரசிம்மர், அஷ்டபுஜ துர்க்கை, கருடன், ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகள் இருக்கின்றன. ஸ்ரீ பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட தலம். இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. கல்பாக்கத்திலிருந்து ECR சாலையில் 8ஆவது கிமீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோயில். ஆலய அர்ச்சகர் திரு கோபு பட்டாச்சாரியார் -9790846554. மற்றும் தொடர்புக்கு பிரபாகரன் 9841044567.

புராண முக்கியத்துவம்

மகாபாரத யுத்தம் முடிந்து , கர்ணன் தங்கள் சகோதரன் என்ற உண்மை அறிந்து தன் தாயார் குந்திக்கு தருமபுத்திரர் சாபம் அளிக்கிறார். பன்மையில் பெண்களுக்கு மனதில் எந்த ரகசியமும் தங்க கூடாது என்ற சாபமானது எல்லா பெண்களையும் தாக்குகிறது. அதனால் ராஜ்யத்தில் எல்லா வீடுகளிலும் குழப்பங்கள் ஏற்பட்டு பலவித துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அனைத்து சுமங்கலி பெண்களும் ஓன்று கூடி ராஜாவான தருமபுத்திரரை கண்டு தங்கள் இன்னல்களை எடுத்து கூறுகின்றனர். அவர்கள் வேதனையே சுமங்கலி சாபமாக தருமபுத்திரரை பீடிக்கிறது. ஸ்ரீ கண்ணபிரான் அறிவுரைப்படி தருமரும் ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் உறையும் பல தலங்களுக்கு சென்று தான தர்மங்கள் செய்து வழிபட்டு இத்தலம் வந்தடைந்து தான தர்மங்கள் செய்து பெருமாளை மனமுருக வழிபட்டு வேண்டிட பெருமாள் தரிசனம் அளித்து தோஷத்தை நீக்கி அருளினார். ஸ்ரீ ராமபிரான் ராவணனை வதம் செய்தபின்னர் சீதா தேவியுடன் சிவபூஜை செய்ய வேண்டி அனுமனிடம் சிவலிங்கம் இமயத்திலிருந்து கொண்டு வருமாறு கூறிட அனுமாரும் இமயம் நோக்கி சென்றார். ஆனால் குறித்த நேரம் வந்திட சீதா தேவியை மணலால் லிங்கம் பிடிக்கச் செய்து பூஜையை முடித்தார் ஸ்ரீ ராமபிரான். பூஜை முடிந்தபின் சிவலிங்கத்துடன் வந்த அனுமன் கண நேரம் கோபமுற்றதால் அதனால் வந்த தோஷம் நீங்கிட இந்த தலம் வந்து ஆதிகேசவ பெருமாளை பூஜித்து தோஷம் நீங்கப்பெற்றார்.

நம்பிக்கைகள்

புண்ணிய நதிகள் அனைத்தும் பல காலமாக மக்களின் பாவங்களை ஏற்று அந்த சுமை தாங்க முடியாமல் வருந்தி பிரும்ம தேவரிடன் முறையிட அவரும் ஆதிகேசவ பெருமாளை முறையாக பூஜித்து வழிபட்டால் பாவ சுமை நீங்கும் என்று அறிவுறுத்த புண்ணிய நதிகளும் அவ்வாறே இத்தலம் வந்து தங்கி பெருமாளை வழிபாட்டு வர பாவ சுமை நீங்கி நன்மை அடைந்தனர். பிரகாரத்தில் புண்ணிய நதி தீர்த்தங்கள் இருக்கின்றன.

சிறப்பு அம்சங்கள்

தமிழ் மாதப்பிறப்பன்று (வைகாசி,ஆவணி,கார்த்திகை,மாசி) விஷ்ணுபதி புண்னியகாலத்தில் (அதிகாலை 2.30 முதல் காலை 10.30 வரை) இங்குள்ள அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி,, தான தர்மங்கள் செய்து ஸ்ரீ ஆதி கேசவ பெருமாளை வழிபட்டால் அனைத்து பித்ருதோஷங்களும் தீரும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top