கடலங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/238691873_5925149064224821_7832694581466087247_n.jpg)
முகவரி :
18.கடலங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில்,
கடலங்குடி, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 609501.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
கடலங்குடி கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலையில் பத்து கிமீ பயணித்தால் அரசலாற்றின் வடக்கு கரையில் உள்ள இவ்வூரை அடையலாம். SH370-ல் இருந்து பிரியும் கருவேலி சாலையில் உள்ள பாலத்தை தாண்டி இடதுபுறம் திரும்பினால் கடலங்குடி. இந்த பெயரில் பல ஊர்கள் உள்ளன அதனால் இந்த ஊருக்கு 18.கடலங்குடி என பெயர். சிறிய கிராமம் தான் இங்கு இரண்டு சிவாலயங்கள் உள்ளன. ஒன்று கைலாசநாதர் இதற்க்கு செல்ல சரியான வழியில்லை, அதனால் இறைவன் என்னை விஸ்வநாதராக இருக்கிறேன் அங்கு வந்து பார் என கூறிவிட்டார்.
இக்கோயில் ஊரின் பிரதான சாலையில் உள்ளது. கிழக்கு நோக்கியது ஒரு தொடக்கப்பள்ளியின் எதிரில் உள்ளது, இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் இறைவி விசாலாட்சி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இரு கருவறைகளையும் இணைக்கும் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது அதில் நந்தி உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் முருகன் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன. வடகிழக்கில் நவகிரகங்கள் உள்ளன. கோயிலுக்கு வெளியே புதிய வரவாக ஆஞ்சநேயர் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/04/236324882_5925149167558144_1263722473000098402_n.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/04/236414264_5925149770891417_3819827822559494148_n-622x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/04/237052910_5925149690891425_8751736542222375222_n-622x1024.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/04/237950551_5925148824224845_4435056849762727946_n.jpg)
![](https://3.108.66.198/wp-content/uploads/2023/04/238691873_5925149064224821_7832694581466087247_n.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடலங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி