எலிபண்டா குகைகள் (மகேஷமூர்த்தி / திரிமூர்த்தி சிவன்), காராப்பூரி தீவு,
முகவரி
எலிபண்டா குகைகள் (மகேஷமூர்த்தி / திரிமூர்த்தி சிவன்), காராப்பூரி தீவு, மகாராஷ்டிரா மாவட்டம் – 400094
இறைவன்
இறைவன்: மகேஷமூர்த்தி / திரிமூர்த்தி
அறிமுகம்
எலிபண்டா குகைகள், மும்பை கடற்கரைக்கு அப்பால், மும்பாய்த் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி தீவில் அமைந்துள்ளன. போத்துக்கீசர் இத்தீவுக்கு எலிபண்டாத் தீவு எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன. எலிபெண்டா தீவு 16 கிமீ பரப்பளவு கொண்டது. தீவை சுற்றிலும தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது. இரண்டாள் மட்டம் உயரம். 27 மீட்டர் சதுர அறை. பருத்த தூண்கள், சதுரமாய் கீழே தொடங்கி, அலங்கார வளையங்களுடன் மேல் பாறையைத் தாங்குபவை. இவை பார்க்க மாளிகைப்போல் காட்சியளிக்கிறது. அதனுள் நுழைந்தால் வலது புறத்தில் உள்ள நடராஜர். சிதைந்துள்ளது. பெரியது. கண்களை மூடி மோன நிலை, ஆடலின் அசைவுகளைக் கல்லில் வடித்து, சிலை உயிரோட்டம் கொடுத்திருக்கிறான் அந்த முகம் தெரியாத சிற்பி. உள்ள ஒரு கருவறை. வெளியே காவலுக்கு ரெண்டு துவாரபாலகர்கள். வலது பக்கம் அடுத்த காட்சி. அந்தகாசுரவத மூர்த்தி. கைகளில் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு, முகத்தில் போர் வீரனின் உக்கிரம் தத்ரூபமாக உள்ளது. மாப்பிள்ளை மற்றும் பெண்ணின்(சிவனின் கல்யாண கோலமோ) ஆளுயர சிற்பங்கள், அதில் உள்ள நளினம், வானில் மிதக்கும் தேவர்கள் என அசத்தலா இருக்கு. கங்காதர மூர்த்தி. ஒன்றாம் குகையின் பின்புற கருவறையில் உள்ள மகேஷமூர்த்தி சிவன் இவர். திரிமூர்த்தி என்று இவரை அழைக்கின்றனர். திரிமூர்த்தி – மூன்று முகம் கொண்ட சிவன். இடதுபக்கம் மீசையும் கோபமுமாக இருப்பவர் ருத்ரன். இவர் கோபம் உலகத்தை அழிக்கும். எரித்து சாம்பலாக்கும். நடுவில அம்சமா மோனத்தில் ஆழ்ந்திருப்பவர் தத்புருஷர். உலகின் நன்மை தீமைகளின் சமநிலை கெடாமல் பார்ப்பவர். இந்தப்பக்கமாக இருப்பவர் யோகேஷ்வரர். உலக நன்மைக்காக தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார்.சத்யோஜதர், இஷானர் என இரு முகங்கள் பின்னாடி இருக்கும். திரிமூர்த்திக்கு கருவறைக்குப் பக்கத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர். மலர் மேல் யோகநிலையில் அமர்ந்திருக்கும் யோகேஷ்வர சிவன். சிவ-பார்வதியின் சிற்பங்கள் மற்றும் இராவணனின் சிற்பங்களும் இங்கு உண்டு.
காலம்
2 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலகப்பாரம்பரிய தளம் (UNESCO)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மும்பை துறைமுகம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மும்பை
அருகிலுள்ள விமான நிலையம்
மும்பை