Monday Jan 13, 2025

இரு மடங்கு பலன் தரும் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டுமா? இந்த தலத்திற்கு வாங்க

இரட்டை விநாயகர் காட்சி தருவதை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயருக்கு என தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று காணப்படுவது மிக அரிதான அமைப்பாகும். இவரை ஒருமுறை வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக விநாயகரை வணங்கி விட்டு பணிகளை துவங்குவது போல், இப்பகுதி மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி விட்டு தான் எந்த காரியத்தையும் துவக்குகிறார்கள்.

கலியுகத்திலும் சிரஞ்சீவியாக இருந்து பக்தர்களை காக்கும் ஒப்பற்ற தெய்வமாக விளங்குபவர் ஆஞ்சநேயர். அந்த ஆஞ்சநேயருக்கு பல இடங்களிலும் கோவில் அமைந்துள்ளது. நாமக்கல், சுசீந்திரம் உள்ளிட்ட பல இடங்களில் பிரம்மாண்ட உருவத்தில் ஆஞ்சநேயர் காட்சி தருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஒரு கோவிலில் ஒரே இடத்தில் இரண்டு ஆஞ்சநேயர்களை தரிசிக்க முடியும்மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது மேலப்பாதி என்ற கிராமம். இங்கு தான் பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. செம்பனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இக்கோவில் இந்த பகுதியில் உள்ள மிக முக்கியமான வழிபாட்டு தலமாக இக்கோவில் விளங்குகிறது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்கள் செம்பனார் கோவில் மற்றும் மேலப்பாதி கிராமத்திற்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றை கடந்து செல்வதற்காக மூங்கிலால் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மனித குரங்குகள் வந்து இப்பகுதி மக்கள் பாலம் அமைப்பதற்கு உதவி செய்துள்ளன. ஒரு நாள் பாலம் அமைக்கும் பணிகள் முடிந்த அசதியில் குரங்குகள் இரண்டும் அருகில் இருந்த இலுப்பை காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும் அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டன. இதை கண்ட கிராம மக்கள் ஆஞ்சநேயரே இந்த குரங்குகளின் வடிவில் வந்து தங்களுக்கு பாலம் உதவியதாக கருதினர். இதனால் அந்த குரங்குகள் ஐயக்கிமான இடத்திலேயே இருட்டை ஆஞ்சநேயர் கோவிலை எழுப்பினர். இந்த ஆஞ்சநேயரிடம் என்ன வேண்டிக் கொண்டாலும் அது இரட்டிப்பு பலனை தரும் என்பது நம்பிக்கை. இங்குள்ள இரட்டை ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல ஆஞ்சநேயரும் நமது வேண்டுதலுக்கு மனம் இறங்குவார். நம்முடைய துன்பங்களும் வெண்ணெய் போல் உருகி ஓடி விடும் என்பது நம்பிக்கை. இத்தல ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானால் ஏற்படும் தாக்கல் குறையும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்ட பிறகு துவங்கினால் எடுத்த காரியமும் வெற்றி அடையும். எப்படிப்பட்ட தோஷமும் விலகி விடும். நவகிரக தோஷங்கள் எதுவானாலும் இந்த தல இரட்டை ஆஞ்சநேயரை வழிபட விலகி விடும். அமாவாசை நாட்களில் இந்த ஆஞ்சநேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிறப்பு அபிஷேகங்கள், துளசி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை சாற்றி பக்தர்கள் வழிபடுகிறார்கள்

References by:

https://tamil.samayam.com/religion/temples/irattai-anjaneyar-temple-melapathy-mayiladuthurai/articleshow/100726786.cms

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top