Sunday Dec 22, 2024

ஆடிமாத வெள்ளிக்கிழமையின் மகிமைகள்:

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு தனிச் சிறப்புண்டு. இம்மாத வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் மட்டுமின்றி, இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் திருமணமான பெண்கள் விரமிருந்தால், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இம்மாத வெள்ளிக்கிழமைகளில் யார் அம்மனை வேண்டி விரதமிருந்தாலும், அவர்கள் நினைப்பது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால், நிச்சயம் நினைப்பது நிறைவேறும்.

🌷முதல் வெள்ளிக்கிழமை:
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை யானது சுவர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சுவர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். எனவே ஆடி மாத முதல் வெள்ளியின் போது, சுவர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.

🌷இரண்டாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உகந்தது. காளி தேவியின் மற்றொரு வடிவம் தான் அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளியின் போது அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக் கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.

🌷மூன்றாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையானது அன்னை காளிகாம்பாளுக்கு உகந்தது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். எனவே காளிகாம்பாளை மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது வேண்டினால், தைரியம் அதிகரிப்பதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

🌷நான்காம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையானது காமாட்சி அம்மனுக்கு உகந்தது. இவர் சக்தியின் ஓர் வடிவம். இவரை ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின் போது வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீய சக்தி நீங்கும், திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

🌷ஐந்தாம் வெள்ளிக்கிழமை:
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி வெள்ளிக்கிழமையின் போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top