Friday Dec 27, 2024

அழகியமணவாளம் சிவன் கோயில், திருச்சி

முகவரி

அழகியமணவாளம் சிவன் கோயில், கோபுரப்பட்டி, மணச்சநல்லூர், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம் – 621216.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

சென்னையிலிருந்து 316 கி.மீ தொலைவில் உள்ள கி.மீ திருச்சி – திருபைஞ்ஞீலி சாலையில் மண்ணச்சநல்லூருக்கு அடுத்து கோபுரப்பட்டி என்னும் சிற்றூரில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோயில் அமலீஸ்வரர் கோயிலுக்கு 1 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் வாயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. இக்கோயிலின் கருவறையில் 16 பட்டைகளுடன் கூடிய லிங்கமும், (தாரலிங்கம்) தாமரைப் பூ வடிவில் ஆவுடையாரும், சிற்ப வேலைப்பாடுகளும் அமைந்துள்ளது. கருவறையை அடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து மஹாமண்டபம் இடிந்த நிலையில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

இக்கோயிலின் விமானம் திராவிடக் கட்டடக் கலைப்பாணியில் அமையதுள்ளது.மேலும் விமானம் செங்கற்களால கட்டப்பட்டுள்ளது. அதிட்டானத்தில் மிகவும் பொறிந்து சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளது.மேலும் கோயில் சுற்றுப் பிராகாரத்தில் கோயில் கட்டடத்திலிருந்து பிரித்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள், போதிகைகள், கூரை போன்றவைகள் மறையாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முயதைய சோழர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை பெரியகோயில் கவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நடன மாதர்கள் இவ்வூரில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இவ்வூரில் நிலம் தானமாக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. சோழமன்னர்களில் கண்டராதித்த சோழனுடைய மகன் உத்தம சோழன் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கல்வெட்டுகளில் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகிய மன்னர்கள் குறிக்கப்படுகிறார்கள்

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கோபுரப்பட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top