Friday Dec 27, 2024

அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில், மத்தியப்பிரதேசம்

முகவரி

அருள்மிகு அமர்கண்டாக் கால்மாதவா தேவி சக்தி பீடக் கோவில் அமர்கண்டாக் சாலை, அமர்கண்டாக், மத்தியப்பிரதேசம் – 484 886.

இறைவன்

சக்தி: காளி பைரவர்: அஸிதாங்கர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம்

அறிமுகம்

கால்மாதவா கோயில் 6000 க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான கோயிலாகும். சூர்யவன்ஷி சாம்ராட் என்பவரால் நிறுவியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் வெள்ளை பாறையால் கட்டப்பட்டு கோயிலுடன் குளங்கள் மற்றும் குண்டுகள் உள்ளன. இக்கோவில் சக்திப்பீடக்கோவிலாக கூறப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன் சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் இடது நிதம்பம் அல்லது இடது பிருஷ்டம் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

மகர சங்கராந்தி, சாரதப் பூர்ணிமா, தீபாவளி, சோம்வதி அமாவாசை, ராம் நவமி, நவராத்திரி.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அமர்கண்டாக்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஜபல்பூர்

அருகிலுள்ள விமான நிலையம்

ஜபல்பூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top