Monday Dec 23, 2024

அரியநாயகிபுரம் கைலாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அரியநாயகிபுரம் கைலாசநாதர் திருக்கோயில்,

அரியநாயகிபுரம்,

திருநெல்வேலி மாவட்டம் – 627603.

இறைவன்:

கைலாசநாதர்

இறைவி:

அரியநாயகி

அறிமுகம்:

திருநெல்வேலி முக்கூடல் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அரியநாயகிபுரம் அமைந்துள்ளது பேருந்து நிறுத்தத்தில் எதிரிலேயே கோயில் உள்ளது. பிரம்மாண்ட புராணம் கந்தபுராணம் சங்கர சங்கிதை திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றாலப் புராணம் ஆகிய இலக்கியங்கள் அரியநாயகிபுரம் தலபெருமை மிக அழகாக எடுத்துச் சொல்லப்படுகிறது.

புராண முக்கியத்துவம் :

 முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கிபி.1268-1318) ஆட்சிக் காலத்தில் இங்கு கற்றளியாக எழுப்பப்பட்டது கைலாசநாதர் கோவில். பாண்டியர் ஆட்சியில் முள்ளிநாடு என்றும் குலசேகரநல்லூர் என்று உள்நாட்டு பிரிவிலிலும் இவ்வூர் அழைக்கப்பட்டது. மதுரையை தலைநகராக கொண்டு நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் தளவாய் ஆகவும், திறமை திறமை மிக்க முதல் மந்திரியாகவும் பணியாற்றியவர் திருநெல்வேலியை சேர்ந்த அரியநாத முதலியார். இவர் விசுவநாத நாயக்கர் (கி.பி.1524-1564) முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கிபி.1564-1572) வீரப்ப நாயக்கர் (கி.பி.1572-1595) ஆகிய மன்னர்களிடம் விசுவாசத்தோடு இருந்தார். இவர் ஆதியில் கைலாசபுரம் குலசேகரநல்லூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இவ்வூர் சிவாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்தார்.

அந்த வேலையை வேதம் கற்றுத் தெளிந்த அந்தணர்களின் குடியிருப்பை உண்டாக்கி அவர்களுக்குள் தர்மங்கள் அளித்தார். மேலும் தேரோடும் வீதிகளை உருவாக்கினார். இதனால் அகமழிந்த உள்ளூர் மக்கள் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்திருக்கோயில் அம்பாளுக்கு அரியநாயகி என்ற திருப்பெயரும் இவ்வூருக்கு அரியநாயகிபுரம் என்ற பெயரையும் சூட்டினார்கள்.

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவரின் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.

ஒருசமயம் இப்பகுதியில் சங்கரன் என்ற ஆண் தனது மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். மழலை பாக்கியம் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. இதனால் மாலிகா தனது தங்கை இந்துமதியை தனது கணவருடன் இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தார். இந்துமதியின் தூய சிவபக்தியும் தொண்டு உள்ளம் நிறைந்தவள். நாள்தோறும் ஆற்று நீர் எடுக்க செல்லும் வழியில் 108 லிங்கங்களில் உருவாக்கி ஆத்மார்த்தமாய் வணங்கி வந்தாள். அவரது தூய பக்திக்கு மனமிரங்கி இறைவன் அவனுக்கு மழலை வரம் அளித்தார். விரைவில் ஒரு ஆண்மகனை அவள் ஈன்றெடுக்க குழந்தைக்கு சுகன் என்ற பெயரிட்டு உரிய வயதில் நற்பண்பும் மிக்கவன். சுசீலை என்பவளை அவனுக்கு மனம் வைத்து முடித்தனர்.

இறை பக்தி மிக்கவர்கள் குடும்பத்தில் தொடர்ச்சியாக நல்லவை நடப்பதை கண்டு மனம் பொறுக்காத தீயவன் ஒருநாள் சுகன் ஆற்றங்கரை பக்கம் வந்த நிலையில் அவனை மறைந்திருந்து தாக்கி ஓடும் ஆற்று வெள்ளத்தில் தள்ளிவிட்டாலள். நெடுநேரமாகியும் கணவன் வீடு திரும்பாததால் சுசீலை மனம் வருந்தினார் ஏதோ விபரீதம் நடந்து இருக்க என்பதை உணர்ந்து உடனடியாக தன் மாமனார் மாமியாரிடம் அதனை தெரிவித்தால் உடனே எல்லோருமாக சேர்ந்து இத்தலம் வந்து கைலாசநாதர் இடம் முறையிட்டு கதறினார்கள். மனமிரங்கிய இறைவன் தனது பக்தனின் மகனை மீட்டுத் தருமாறு பைரவருக்கு ஆணையிட்டார்.

ஆற்றுக்குள் மூழ்கி கிடந்த சுகன் பைரவர் அருளால் வெளிவந்து தன் குடும்பத்தினர் முன் நின்றான். அதேவேளையில் சிவனடியார் குடும்பக்கு தீங்கு நினைத்தவளை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார் பைரவர். அதை கண்டு அஞ்சியவள் மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார். அவளை மன்னித்து விடும்படி இறைவன் கூறியதால், அவள் அந்த குடும்பத்தினருடன் பகை மறந்து நட்புடன் பழகத் தொடங்கினாள். அன்றுமுதல் குடும்பம் உட்பட ஊரார் அனைவரும் ஒற்றுமையாய் மகிழ்ச்சியாய் இங்கே வாழத் தொடங்கினர். இந்த வரலாறு கோயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

கிழக்கு நோக்கிய 5 சுற்றுகளில் உயர்ந்த திருமதில் சூழ மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது கோவில். தலவிருட்சமான காட்டாத்தி மரம் விளங்குகிறது. கோயில் வாசலில் நீராழி மண்டபத்துடன் கூடிய சூரிய புஷ்கரணி தீர்த்த குளம் உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையின் தல புராண நிகழ்வை எடுத்துக் கூறும் விதமாக பைரவ தீர்த்தம் உள்ளது. கோயிலுள் சுற்றில் கபில தீர்த்தம் என்ற தீர்த்தக் கிணறு இருக்கிறது. பிரதான வாசலில் உள்ள சாளரத்தின் வழியே உள்ளே நுழைந்ததும் ஆஸ்தான மண்டபம், முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் சுவாமி சன்னதி அமைந்துள்ளது.

கருவறையில் லிங்க மூர்த்தமாக கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார்.  உன் சுற்றில் அதிகார நந்தி, சூரியன், ஏழு சப்த கன்னியர், சேக்கிழார், 63 நாயன்மார்கள், கன்னிமூலை கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், கால பைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. உள்சுற்று முழுவதும் திருமாளிகை அமைப்பில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெளிச்சுற்று முழுவதும் பூத்துக் குலுங்கும் நந்தவனம் பசுமையாக காட்சியளிக்கிறது. ஆதியின் தாமிரபரணி ஆற்றங்கரையில் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படும் உதயமார்த்தாண்ட தர்ம சாஸ்தா திருக்கோயில் பிடிமண் எடுத்து வந்து இக்கோயில் கட்டப்பட்டது. வடக்குச் சுற்றில் காசி விசுவநாதர் விசாலாட்சி அம்பாள் திருக்கோயில் கிழக்கு பார்த்த வண்ணம் உள்ளது.

திருவிழாக்கள்:

ஆண்டு முழுவதும் அநேக உற்சவங்கள் மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. தமிழ் மாத பிறப்பு, சதுர்த்தி, பிரதோஷம், பவுர்ணமி அஷ்டமி, திருவாதிரை, கார்த்திகை, நட்சத்திர நாட்கள், மாதாந்திர கடைசி வெள்ளி, திருவிளக்கு பூஜை, திருவாசக முற்றோதல் இவற்றோடு வருட விழாக்களாக கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், மார்கழி முழுக்க திருப்பள்ளி எழுச்சி ஆருத்ரா தரிசனம், ஆண்டுக்கு ஆறு கால நடராஜர் அபிஷேகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியவையும் இங்கே விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

காலம்

கிபி.1268-1318 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரியநாயகிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top