Monday Dec 30, 2024

அய்யாபட்டி திருக்கோட்டீஸ்வரர் சிவன்கோயில், மதுரை

முகவரி

அய்யாபட்டி திருக்கோட்டீஸ்வரர் சிவன்கோயில், அய்யாபட்டி (தர்காகுடி), மதுரை மாவட்டம் – 625101.

இறைவன்

இறைவன்: திருக்கோட்டீஸ்வரர்

அறிமுகம்

சென்னையிலிருந்து 414 கி.மீ தொலைவில் உள்ள மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் தற்காகுடி உள்ளது. இவ்வூரின் குளக்கரையில் ஒரு பிற்கால பாண்டியர் காலச் சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இக்கோயில் கி.பி. 13-ஆம் நூற்றாண்டினது எனத் துணியலாம். இக்கோயில் இறைவன் திருக்கோட்டீஸ்வரர் என்றும் ”ஊர் தாக்காய்குடி” என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. ஒரு சிறு கருவறை, அர்த்தமண்டபத்துடன் இன்று காட்சியளிக்கும் இக்கோயில் தொடக்கத்தில் திருச்சுற்று மதிலுடன் கூடிய விரிவான கோயிலாக இருந்துள்ளது. பராக்கிரம பாண்டியன், குலோசரபாண்டிய, வீரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் சுவர்களில் காணப்படுகின்றன. பிறக்கல்வெட்டுகளய் கோயிலுக்கான நிலக்கொடைகளைத் தெரிவிக்கின்றன. விநாயகர், முருகன், பைரவர், அம்மன் ஆகிய பிறசிறு தெய்வங்களுக்குச் சிற்றாலயங்களும் நந்திமண்டபமும் தொடக்கத்தில் கட்டப்பட்டிருந்தன. ததற்போது அவை பெரிதும் சிதைந்துள்ளன.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அய்யாபட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top