Tuesday Dec 24, 2024

யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் திருக்கோயில், மதுரை

முகவரி

அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில், யானைமலை ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் – 625107. போன்: +91 – 98420 24866

இறைவன்

இறைவன்: யோக நரசிம்மர் இறைவி: நரசிங்கவல்லி தாயார்

அறிமுகம்

அருள்மிகு யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகரில் இருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒத்தக்கடை என்கிற ஊரில் யானைமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. பெரிய குடைவறை கோயில் என்ற பெருமை உடையது. பெருமாள் யானைக்கு முக்தி கொடுத்த சிறப்பு வாய்ந்த தளம். மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் மேற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர். கொடிமரம் இல்லாத கோயிலாக உள்ளது. பொதுவாக கருவறைக்கு மேலுள்ள விமானத்தில் நீள அகலத்தை பொருத்தது. இந்த கோயிலில் குடைவறையாக அமைந்துள்ளதோடு, கருவறைக்கு மேல் மிகவும் உயர்ந்த யானை மலை உள்ளது அதனால் கொடி மரம் வைக்கப்படவில்லை. விஷ்ணு கோயிலான இங்கு மிகச்சிறப்பாக பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இங்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தியை அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இத்தலத்துக்கு வந்தான். அப்போது. நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்ததுமே, உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. அத்துடன் அவளை ஆலிங்கனம் செய்து யோகநரசிம்மராக கேட்டதையெல்லாம் தருபவராக அருள்பாலித்து வருகிறார்.

நம்பிக்கைகள்

நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தி பிரதோஷ கலாத்தில் தான். எனவே, அந்த நேரத்தில் இந்த யோகநரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிபயம் இருக்காது. மரணபயம் நீங்கும். தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் திருமணத் தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால், மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகிவிடுவார் என்பதெல்லாம் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. ஏனெனில் கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப்பொறுத்தே அமையும். இத் தலத்தில் கருவறைக்குமேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என கூறப்படுகிறது. இரு ஒரு குடவறைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும் குடவறை அமைப்புகள் தான்.

திருவிழாக்கள்

கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசிப்பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை போலவே இங்கும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு. சிவன் கோயில்களைப்போலவே இங்கும் பிரதோஷ வழிபாடு உண்டு. எனவே நரசிம்ம பிரதோஷ பூஜை என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு.

காலம்

770 ஆம் ஆண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஒத்தக்கடை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top