Sunday Dec 22, 2024

பெரமர்கோயில் சிவன்கோயில்,திருவாரூர்

முகவரி

பெரமர்கோயில் சிவன்கோயில், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 705

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

வலங்கைமான்- கொரடாச்சேரி சுள்ளான் ஆற்று கரை சாலையில் நல்லம்பூர், காங்கேய நகரம் அடுத்து அடவங்குடி அமைந்துள்ளது. ஆதவன்குடியே அடவங்குடி ஆனது இதன் ஒரு பகுதி பெரமர்கோயில் ஆகும். பிரமம் என்பது சூரியனுக்கு உள்ள ஒரு பெயர், அதனால் பிரமம் கோயில் எனப்பட்டு பின்னர் பெரமர்கோயில் ஆனதா என உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன். இங்கு முன்னர் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் இருந்துள்ளது மிகவும் சிதிலமடைந்ததால் ஊர் மக்கள் சேர்ந்து இறைவனுக்கு ஓர் கோயில் எழுப்ப எண்ணி ராஜகோபுரத்துடன் கூடிய ஓர் கோயில் எழுப்பி வருகின்றனர். எனினும் அவ்வப்போது நிதி குறைவால் பணிகள் நின்றுபோயுள்ளன. பல காலமாக இறைவன் இறைவி மற்ற திருமேனிகள் ஓர் ஒட்டு கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. இடமில்லாமல் ஒரு லிங்கமும் விநாயகரும் வெயிலில் இருத்தப்பட்டுள்ளதை எண்ணி மனம் பதைக்கிறது. இயன்ற பொருள் கொடுத்து நல்லறமாற்ற வாரீர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அடவங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top