Thursday Dec 26, 2024

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம், ஆதிகடவூர், திருக்கடையூர் – 609 311. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 287 429,287 222, +91- 94420 12133

இறைவன்

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: மலர்குழல்மின்னம்மை

அறிமுகம்

திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 48ஆவது சிவத்தலமாகும். ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேயாகும்.சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.பிரம்மபுரி, வில்வராண்யம், கடவூர் மயானம், பிரம்மபுரம், சிவவேதபுரி, திருமெய்ஞானம் என்ற பெயர்களில் இத்தலம் அழைக்கப்படுகிறது. தல மரமான கொன்றை மரம் கோயிலின் வட புற நுழைவாயிலில் உள்ளது. கோயிலின் தென் புறத்தில் கோயிலின் குளமான பிரம்ம தீர்த்தம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் சிவன், பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உலகத்தை அழித்து விடுவார். இச்சமயத்தில், படைப்புக் கடவுளான பிரம்மாவும் அழிந்து போவார். புது யுகம் துவங்கும்போது, மீண்டும் பிரம்மாவை உண்டாக்கி, அவர் மூலமாக ஜீவராசிகள் பிறக்கும்படி செய்வார். அவ்வாறு பிரம்மாவை அழித்து, மீண்டும் உயிர்ப்பித்த தலம் இது. அதோடு, பிரம்மாவுக்கு உயிர்களை படைக்கும் ரகசியம் பற்றி இங்கு ஞான உபதேசம் செய்தருளினார். பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள சிங்காரவேலர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றே சாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 111 வது தேவாரத்தலம் ஆகும். சிங்காரவேலர் சிறப்பு: வள்ளி, தெய்வானையுடன் சிங்காரவேலர் என்ற திருநாமத்துடன் முருகப் பெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இவரது சன்னதி, விமானத்துடன் கூடிய தனி மண்டப அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் போருக்குச் செல்லும் கோலத்தில் கைகளில் வேல் மற்றும் வில் ஏந்தி, கழுத்தில் ருத்ராட்ச மாலை, பாதத்தில் குறடு (காலணி) அணிந்து காட்சி தருகிறார். இவரது சிலை, வில்லேந்திய ராமன் போல நளினமாக, இடப்புறமாக சற்றேசாய்ந்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. முருகன் சிவனின் அம்சம் என்றாலும், இத்தலத்தில் ராமனின் சிலை போல வளைந்து காட்சி தருவதால், இவரை திருமாலின் அம்சமாகக் கருதுகின்றனர். மாமனைப் போல் மருமகன் என்றுகொண்டாடுகின்றனர். சிவசன்னதியின் ஒருபுறத்தில் சண்டிகேஸ்வரர் இருப்பது போல, இந்த முருகனுக்கும் ஒரு சண்டிகேஸ்வரர் உள்ளார். இவரை, குக சண்டிகேஸ்வரர் என்கின்றனர். ஒட்டிய வயிறுடன் விநாயகர்: விநாயகர், பெரிய வயிறுடன்தான் இருப்பார். இக்கோயிலில் இவர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருகிறார். இவரை, பிரணவ விநாயகர் என்று அழைக்கிறார்கள். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமான முருகனையும், பிரணவ விநாயகரையும் இங்கு தரிசிப்பது விசேஷம். படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு சிவன் படைப்பின் ரகசியத்தை உபதேசித்த போது, கைகட்டி, மெய் பொத்தி விநாயகரும் உபதேசத்தைக் கேட்டாராம். இதனால், இவர் வயிறு சிறுத்து இருப்பதாகச் சொல்வர். படிக்கிற குழந்தைகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை இதன் மூலம் சொல்கிறார்.

திருவிழாக்கள்

திருக்கார்த்திகை, சிவராத்திரி, திருவாதிரை

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமயானம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top