Monday Dec 23, 2024

கோவளம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), சென்னை

முகவரி

கோவளம் ஸ்ரீ கைலாசநாதர் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), கோவளம் , சென்னை மாவட்டம்- 603112.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர் இறைவி : ஸ்ரீ கனகவல்லி

அறிமுகம்

சென்னை மாமல்லபுரம் ECR சாலையில் உள்ள கோவளம் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது இந்த பழமையான சிவன் கோயில். கற்கோயிலாக விளங்கும் இத் தலத்தில் மூலவராக ஸ்ரீ கைலாசநாதர் கிழக்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ கனகவல்லி. சுமார் 1350 ஆண்டுகள் பழமையான இக்கோயில் 35 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டது. பல கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. மற்ற சன்னதிகள் விநாயகர், வள்ளி, தேவசேனா முருகன் , பஞ்ச கோஷ்ட மூர்த்திகள், நவக்கிரகம், பைரவர். ஒரு மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சிலை ஓன்று உள்ளது. தொடர்புக்கு திரு டில்லி செட்டியார்-9176491300, திருமதி வனஜா-9884760952.

நம்பிக்கைகள்

பரிகார தலம் இங்குள்ள நந்தி தேவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். இவருக்கு தாலி காட்டினாள் திருமண பாக்கியம் உடனே உண்டாகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேலக்கொட்டையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வண்டலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top