Monday Dec 23, 2024

ஆனந்தா புத்த கோவில், மியான்மர் (பர்மா)

முகவரி

ஆனந்தா புத்த கோவில், பழைய பாகன், மியான்மர் (பர்மா)

இறைவன்

இறைவன்: புத்தர்

அறிமுகம்

ஆனந்தா கோவில் மியான்மரில் உள்ள பாகன்னில் அமைந்துள்ளது. இது ஒரு பெளத்த மதக் கோவிலாகும். இந்தக் கோவில் கி.மு.1105-ஆம் ஆண்டுவாக்கில் பாகன் வம்சாவழியில் வந்த கியான்சித்தா என்ற அரசரால் கட்டப்பட்டது. ஏறக்குறைய 912 ஆண்டு தொண்மையானது. பாகன்னில் இருக்கும் நான்கு புராதன கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலில் பல மாடிகளை கொண்டு அமைந்திருக்கிறது. இந்த அமைப்பு ஒரு குடையின் மேல் ஒரு சிறிய அடுக்குத் ஸ்தூபியைக் ஹதி (குடை அல்லது மேல் ஆபரணத்தின் பெயர்) கொண்டிருக்கும் கோவில் அமைப்பைக் கொண்டிருக்கிறது, இதுபோன்ற குடை அமைப்பு மியான்மரில் கிட்டத்தட்ட அனைத்து அடுக்குத் ஸ்தூபிக்களிலும் உள்ளது. இந்த பௌத்த ஆலயத்தில் நான்கு புத்தர் சிலைகள் நின்றவ்வாறு உள்ளது. ஒவ்வொரு புத்தரும் ஒவ்வொரு திசைகளை நோக்கிப் பார்த்தபடி வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு நோக்கி உள்ளனர். இந்த கோவில் மோன் இணத்தின் ஒரு சிறந்த கட்டிடக்கலை அதிசயமாக கருதப்படுகிறது மற்றும் இந்திய கட்டிடக்கலை பாணியையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஈர்க்கக்கூடிய கோவில் மியான்மரின் வெஸ்ட்மினிஸ்டர் அபே என்றழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 10-11 ஆம் நூற்றாண்டின் இடைபட்ட காலத்தில் உருவான பத்தொட்டியா கோயிலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, மேலும் அது “கற்கள் நிறைந்த அருங்காட்சியகம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டு பாகன்னில் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்தக் கோவில் சேதமடைந்தது. பின்னர் கோவில் முழுமையாக மீழைமைக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோவில் மதில் சுவர்கள் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு பாதுகாக்கப்பட்டது. கோவில் தோற்றுவிக்கப்பட்ட 900 ஆம் ஆண்டு நினைவுக் கொண்டாட்டம் 1990 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக பாகன் நகரில் கொண்டாடப்பட்டது.

புராண முக்கியத்துவம்

கி.மு.1105-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கச்சிதமான பரிமாணம் கொண்ட கோவிலின் அமைப்பிற்கும் புகழுக்கும் காரணமாகவும் சொந்தமாகவும் இருந்தவர் அரசர் கியான்சித்தா. இது “ஆரம்பகால பாகன் காலத்தின் அழகிய முடிவாகவும் மற்றும் மத்திய காலத்தின் ஆரம்பவும்” அமைந்தது என்று குறிப்பிடபடுகிறது. கி.மு.1080-ஆம் ஆண்டு, பஹோத்தான்யா கோயில் கட்டப்பட்ட போது ஆரம்பிக்கப்பட்ட சமயக் கல்வியின் உச்சநிலையாக இந்த கோயிலின் கட்டுமான காலம் கருதப்படுகிறது. அரசர் ஏற்றுக்கொண்ட தேரவாத பௌத்தம், புத்தரின் போதனைகளை ஒரு கோவிலின் ஊடாக துல்லியமாகவும், உண்மையான வழியாகவும், பர்மாவை ஒரு கொடியின் கீழ் ஐக்கியப்படுத்துவதற்கும், “வெகுஜன மத நம்பிக்கையை உருவாக்குவதற்கும்” அவரைத் இந்தக் கோவில் கட்டத் தூண்டியது. புத்தரின் கோட்பாட்டில் அவரது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியதன் மூலம், அரசின் பாதுகாவலனாக அரசர் இருக்க விரும்பினார் எனக் கருதப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஆலயத்தின் பெயர் ஆனந்தா என்பது புத்தரின் முதல் உறவினர், தனிப்பட்ட செயலாளர், அவருடைய பல முக்கிய சீடர்களில் ஒருவராகவும், பக்தியுள்ள உதவியாளராகவும் இருந்தவரின் பெயராகும். இது ஒரு காலத்தில் ஆனந்தா கோயில் என்று அறியப்பட்டது, சமஸ்கிருத மொழியில் ஆனந்த பின்யா என்ற சொற்றொடர் இருந்து வந்தது, இது “முடிவற்ற ஞானம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாலி, சமஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் ஆனந்தா என்ற வார்த்தை பேரின்பம் என்ற அர்த்தமும் உள்ளது. இந்தப் பெயர் பிரபலமான பௌத்தம் மற்றும் இந்து மதம் இரண்டிலும் பிரபலமான பெயராகும். புத்தரின் பண்புகளையும், அவரது முடிவிலா ஞானத்தையும் (“பர்மியிலும் பாலிவிலும் ஆனந்தபின்யா”) ஆனந்தா என்ற பெயரால் நினைவுக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

பியாட்டோ மாதத்தில் (டிசம்பர் முதல் ஜனவரி வரை) ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வார விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, 1000 துறவிகள் 72 மணி நேரம் தொடர்ந்து வேதம் ஓதுகிறார்கள். மைல்களுக்கு அப்பால் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கோயிலைச் சுற்றி முகாம்களை அமைத்தனர். பௌர்ணமி தினத்தன்று காலையில், அவர்கள் கலந்துகொண்ட துறவிகளுக்கு பரிசு கிண்ணங்களை வழங்குகிறார்கள்.

காலம்

கி.மு.1105-ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பாகன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாகன்

அருகிலுள்ள விமான நிலையம்

நியாங்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top