Sunday Dec 22, 2024

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், வஜ்ஜிரகிரிமலை

முகவரி

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், வஜ்ஜிரகிரிமலை, அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 301.

இறைவன்

இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: மரகதாம்பிகை

அறிமுகம்

சென்னையில் இருந்து சுமார் 104கிமி தொலைவில் NH 45 தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகள் பழமையான வஜ்ரகிரி மலை அமைந்து உள்ளது. இந்த மலை அண்ணாமலையை போல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இன்றளவும் இங்கு சித்தர்கள் வாழ்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மலையை கிரிவலம் வந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். . மூலிகைகள் நிறைந்த வஜ்ரகிரி என்ற மலை மீது இக்கோயில் உள்ளது. சுமார் 700 அடி உயரமுள்ள மலைமேல் படிக்கட்டுகள் உள்ளன. ஸ்ரீ ஔவையார் இத்தல ஈசனை வழிபட்டு உள்ளார். அவரின் பாத சுவடுகள் இங்கு காணப்படுகிறது. சிவபெருமான் பசுபதீஸ்வரராக அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம். இதுவே அகத்திய முனிக்கு கிடைத்த முதல் சிவ பார்வதி திருமணக்கோல தரிசனம் ஆகும். இரண்டாம் மலை தொடரில் அமைந்துள்ள முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக தெற்கு திசை நோக்கி காட்சி கொடுக்கிறார். இவ்விடத்தின் பெருமையை, அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் பாடியுள்ளனர். வரலாற்றுப்பதிவுகள் இவ்விடத்தை சுமார் 4500 வருடம் பழமையானது என்று கூறுகின்றது. மலை அடிவாரத்தில் பெரும்பெயர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் சுமார் 1800 வருடம் பழமையானது என்று கூறுகின்றனர். இந்த எல்லையம்மனே வஜ்ரகிரி மலை தொடரை பாதுகாத்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது

புராண முக்கியத்துவம்

இந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில் 2000 வருடம் பழமையானது. இந்தகோவிலின் சிறப்பு இங்கே இருக்கும் தலவிருட்சம். இங்குள்ள கல்வெட்டுகள் மாவீரன் ராஜேந்திர சோழன் பெரும் போர் புரிந்து வெற்றி கண்ட பிறகு இந்த திருக்கோவிலில் திருப்பணி செய்துள்ளார் என்று கூறுகின்றது. இந்த மலை வழி பாதையில் அமைந்து உள்ள சஞ்சீவினி தீர்த்தம் பல விதமான வியாதிகளை தீர்க்கும் குணம் கொண்டது. பசுபதீஸ்வரர் இங்கே அகஸ்திய குறுமுனிக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்ததால் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் இங்கே சிவ சுப்ரமணியராக இருக்கும் முருக பெருமானை தரிசனம் செய்தால் சத்ரு தொல்லை நீங்கும். தொடர்ந்து கிரிவலம் மற்றும் வழிபாடு செய்து வந்தால் எதிரிகளால் வரும் தொல்லை அறவே நீங்கும். இந்த திருக்கோவில் திருச்செந்தூரிற்கு இணையானது மற்றும் குமர குறுதாச ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளாலும், அருணகிரி நாதராலும் போற்ற பெற்றுள்ளது. பெரும்பெயர்க்கண்டிகை எல்லையம்மனை தரிசனம் செய்தால் மக்கட்செல்வம் மற்றும் குடும்பத்தில் நன்மை உண்டாகும். இந்த பழமையான மலை அருணகிரிக்கு ஒப்பானது. பாரத தேசத்தில் எண்ணற்ற பழமையான கோயில்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் உள்ளகோயில்கள் எண்ணிக்கை பாரத நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருக்கும் கோயில்களைவிட அதிகம் .குறிப்பாக தமிழகத்தில் உள்ளகோயிலின் மூர்த்திகள் சித்தர்கள், முனிவர்கள், தேவர்கள் போன்றோருக்கு காட்சிகொடுத்து அவர்களால் பூஜிக்கப்பட்டு கோவில்களாக உருமாறின. இது தவிர பண்டைய அரசர்களால் கட்டப்பட்டகோயில்கள கணக்கில்லாதவை .இத்தகைய புனிதமான சக்திவாய்ந்த பலகோயில்கள் இன்று கவனிப்பாரற்று பூஜைகளின்றி இருக்கின்றன அதில் பசுபதீஸ்வரர் கோவில், சிவ சுப்பிரமணியர், கைலாசநாதர் கோவிலும் உள்ளடக்கம். ஒரு காலத்தில் நன்கு வழிபடப்பட்ட பழைமையான, பவித்திரமான, சக்திவாய்ந்த இந்த கோயில்கள் இன்று பரிதாப நிலையில் உள்ளன…நித்ய பூஜைகள் இல்லாமல் இடிந்தும் கவனிப்பாரற்றும் இருக்கின்றன. பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை. வஜ்ரகிரி மலையின் ஒரு பகுதியை 1960களிலிருந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய கிறிஸ்தவர்கள் இப்போது மலை உச்சியிலும், அடிவாரத்திலும் பிரம்மாண்டமான `மழைமலை மாதா அருள்தலம்’ என்ற சர்ச்சைக் கட்டியுள்ளனர். மலையில் எங்கு பார்த்தாலும் சிலுவைகளை நட்டு முழு மலையையும் மெல்ல மெல்ல கைப்பற்றி விட்டனர். பைபிளில் வரும் காட்சிகள் சிமெண்ட் சிற்பங்களாக மலை உச்சி வரை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. சில கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும்போதே `மரியே வாழ்க’ என்ற வரிகள் பளிச்சென்று தெரிகிறது. பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வாகனங்களில் செல்வதற்கான பாதை ஆரம்பமாகும் இடத்தில், அலங்கார நுழைவுவாயில் ஒன்றை சர்ச் நிர்வாகம் அமைத்துள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் பசுபதீஸ்வரரையும், மரகதாம்பிகையையும் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், சர்ச் அலங்கார நுழைவு வாயிலுக்குள் நுழைந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது அந்த பாதையிலும் சர்ச் நிர்வாகத்தினர் முட்களால் வேலி அமைத்து வாகனங்கள் செல்லமுடியாதபடி தடுத்து விட்டனர். இதனால் வேறு வழியின்றி சில பக்தர்கள் தற்காலிக பாதை ஒன்றை அமைத்தனர். அந்த பாதையிலும் குப்பைகளைக் கொட்டி கிறிஸ்தவர்கள் நாசம் செய்து வருகின்றனர். எப்படியாவது மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பாதையை இல்லாமல் செய்துவிட்டால் முழு மலைத்தொடரையும் ஆக்கிரமித்து விடலாம் என்ற திட்டத்தில் சர்ச் நிர்வாகம் செயல்படுவதாக அச்சிறுபாக்கத்தில் வசிக்கும் இளைஞர்கள் நம்மிடம் கூறினார்கள். அச்சிறுபாக்கம் மற்றும் மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் அவலத்தையும் சர்ச் நிர்வாகத்தின் அட்டூழியங் களையும் கண்டு மனம் வெதும்பினார்கள். கோடிகளைக் கொட்டி எல்லோரையும் வளைக்கும் ஆற்றல் படைத்த கிறிஸ்தவப் பாதிரிகளை, இந்தக் கிராமத்து இளைஞர்கள் எப்படி எதிர்கொள்ள முடியும்? ஆனாலும் சில இளைஞர்கள் ஒன்றுகூடி பசுபதீஸ்வரர் ஆலயத்தையும், அந்த ஆலயத்திற்குச் செல்லும் பாதையையும் செப்பனிடத் தீர்மானித்தனர். 1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ’ என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் இந்த சமயத்தில் வனத்துறை அதிகாரிகள் சிலர் வந்து `இது வனத்துறைக்கு சொந்தமான இடம்.. அனுமதியில்லாமல் யாரும் எதுவும் செய்யக்கூடாது. என தடுத்தனர். சர்ச்சுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் கொடுக்கிறீர்களே அதுமட்டும் சரியா என கேள்வி கேட்டதற்க்கு, அவர்கள் 99 வருட குத்தகைக்கு இந்தமலை எடுத்துள்ளனர் என்றார்கள். அச்சிறுபாக்கம் மலை உச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலின் வரலாறும், ஊருக்குள் இருக்கும் ஆட்சீஸ்வரர் கோயிலின் வரலாறும் சமகாலத் தவையாகும்.அச்சிறுபாக்கம் கிராமத்து சூழல் மிகவும் அமைதியான கிராமிய மண்ணின் மனத்தோடு, வாழ்க்கையை உணர்த்துவதாக உள்ளது. கிராமத்தினுள் நுழையும்போது ஒரு விநாயகர் கோயிலும், அருகில் பெரிய குளக்கரையும் அதனையடுத்து பஜார் என்று சொல்லப்படும் கடைத்தெருவும் நம்மை வரவேற்கிறது. அதனை அடுத்து ஊருக்குள் நுழைந்தால் ஊரின் மையப்பகுதியில் அற்புதமான வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்டமான சிவன் கோயில் அமைந்துள்ளது. அதுதான், இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில். உள்ளே நுழைந்ததும் அர்த்த மண்டபம். அதனை அடுத்து நேராக மூலவர், சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சுப்ரமணியர் ஆகிய தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற சோழர் காலத்து திருத்தலமாகும். அச்சிறுபாக்கம் என்பது பழங்காலத்தில் அச்சு இருபக்கம் என்றே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதாவது நமது சமய வழக்கப்படி எந்த காரியமானாலும் திருமணம் போன்ற சுப காரியங்களானாலும், தெய்வ காரியங்களானாலும் முழுமுதற் கடவுளான விநாயகரின் திருஉருவத்தை மஞ்சளில் பிடித்து பூஜை செய்த பிறகே ஆரம்பிப்பார்கள். அதனை உணர்த்தும் பாடல்களும் உண்டு, நெடுங்காலத்துக்கு முன்பு கிராமத்து மக்கள் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் தேர்த் திருவிழாவின் போது விநாயகப் பெருமானை வழிபடாமல் தேர் இழுக்க முற்பட்டபோது தேரின் அச்சுமுறிந்து இருபக்கமும், தேரின் சக்கரங்கள் வீழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதனாலேயே அந்த ஊரின் பெயர் அச்சு இருபக்கம் என்று வழங்கலாயிற்று. `அச்சு இருபக்கம்’ என்பதே காலப்போக்கில் அச்சிறுபாக்கம் என்று மாறிற்று என்று கூறப்படுகிறது. அச்சிறுபாக்கம் மலை, கிராமத்தின் வலது புறத்தில் உள்ளது. இம்மலை தரையிலிருந்து சுமார் 700 அடி உயரம் கொண்டது. மலையில் பாறைகளால் அமைக்கப்பட்ட படிகளில் ஏறிச் சென்றால், முதலில் விநாயகரைத் தரிசித்து விட்டு மேலே சென்று பசுபதீஸ்வரரைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் உள்ள கோயிலில் உள்ள சிவாலயம் மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வர வஜ்ரகிரி வடிவேலர் ஆலயம் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகின்றது. இம்மலை வஜ்ரகிரி என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் தோற்றத்தைப் பார்க்கும்போதே அக்கோயில் பல தாக்குதல்களையும், விஷமச் செயல்களையும் எதிர்கொண்டு நிற்பதை உணர முடியும். மலைகள் சூழ்ந்த அடிவாரத்தில் ஒரு குளத்தை நிர்மாணித்து அதில் இரட்டை சுனைகளை சீரமைத்து கிணறுகள் அமைத்துள்ளார். பல மூலிகைச் செடிகொடிகளை கொண்ட வனாந்திரமான மலையின் பின் அடிவாரத்தில் சப்த கன்னிகளுக்கு கோயில் உள்ளது. அச்சிறுபாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களான சீதாபுரம், பள்ளிபேட்டை, நேமம் ஆகிய பகுதிமக்களுக்கு பசுபதீஸ்வரர் கோயில் குலதெய்வக் கோயிலாகும். பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்

நம்பிக்கைகள்

மலை அடிவாரத்தில் பெரும்பெயர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவில் சுமார் 1800 வருடம் பழமையானது என்று கூறுகின்றனர். இந்த எல்லையம்மனே வஜ்ரகிரி மலை தொடரை பாதுகாத்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மலை வழி பாதையில் அமைந்து உள்ள சஞ்சீவினி தீர்த்தம் பல விதமான வியாதிகளை தீர்க்கும் குணம் கொண்டது. பசுபதீஸ்வரர் இங்கே அகஸ்திய குறுமுனிக்கு திருமண கோலத்தில் காட்சி அளித்ததால் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் இங்கே சிவ சுப்ரமணியராக இருக்கும் முருக பெருமானை தரிசனம் செய்தால் சத்ரு தொல்லை நீங்கும். தொடர்ந்து கிரிவலம் மற்றும் வழிபாடு செய்து வந்தால் எதிரிகளால் வரும் தொல்லை அறவே நீங்கும். பெரும்பெயர்க்கண்டிகை எல்லையம்மனை தரிசனம் செய்தால் மக்கட்செல்வம் மற்றும் குடும்பத்தில் நன்மை உண்டாகும்.

சிறப்பு அம்சங்கள்

இந்த மலை அண்ணாமலையை போல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இன்றளவும் இங்கு சித்தர்கள் வாழ்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த வரலாற்று சிறப்பு மிக்க மலையை கிரிவலம் வந்தால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். . மூலிகைகள் நிறைந்த வஜ்ரகிரி என்ற மலை மீது இக்கோயில் உள்ளது. ஸ்ரீ ஔவையார் இத்தல ஈசனை வழிபட்டு உள்ளார். அவரின் பாத சுவடுகள் இங்கு காணப்படுகிறது. சிவபெருமான் பசுபதீஸ்வரராக அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம். இதுவே அகத்திய முனிக்கு கிடைத்த முதல் சிவ பார்வதி திருமணக்கோல தரிசனம் ஆகும். இரண்டாம் மலை தொடரில் அமைந்துள்ள முருக பெருமான் சத்ரு சம்ஹார மூர்த்தியாக தெற்கு திசை நோக்கி காட்சி கொடுக்கிறார். இவ்விடத்தின் பெருமையை, அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் பாடியுள்ளனர். இந்த திருக்கோவில் திருச்செந்தூரிற்கு இணையானது மற்றும் குமர குறுதாச ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளாலும், அருணகிரி நாதராலும் போற்ற பெற்றுள்ளது.

காலம்

1000 to 2000

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அச்சிறுப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அச்சிறுப்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top