Wednesday Jan 22, 2025

விளாச்சேரி பட்டாபிராமர் திருக்கோயில், மதுரை

முகவரி :

அருள்மிகு பட்டாபிராமர் திருக்கோயில்,

விளாச்சேரி-625 006,

மதுரை மாவட்டம்.

போன்: +91- 97888 54854  

இறைவன்:

பட்டாபிராமர்

இறைவி:

சீதை

அறிமுகம்:

                பட்டாபிராமர் கோயில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இந்த இடம் வேதங்கள் மற்றும் தமிழ் அறிஞர்களுக்காகவும் அறியப்படுகிறது. புகழ்பெற்ற தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) இங்கு பிறந்தார் மற்றும் சமஸ்கிருதப் பெயர்களை முதலில் தமிழாக்கினார். விளாச்சேரி முக்கோண வடிவில் உள்ளது. கிட்டத்தட்ட 60 புகழ்பெற்ற வேத அறிஞர்கள் (கணபதிகள்) இங்கு வாழ்ந்தனர்.

விளாச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவிலும், திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிலிருந்து 4 கிமீ தொலைவிலும், மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், மதுரை ரயில் நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவிலும், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், மதுரை விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அதன் பின் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்து கொண்டார். அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்க முடியாது. எனவே அதே பட்டாபிஷேக திருக்கோலத்தினை நாம் காணவேண்டுமானால் விளாச்சேரியில் உள்ள பட்டாபிஷேக ராமர் கோயிலில் காணலாம். இங்குள்ள கோயிலில் வலதுபக்கத்தில் சீதா, இடப்பக்கம் லட்சுமணன் சகிதமாக அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார் ராமர். கருடனும், அனுமனும், துவாரபாலகர்களாக வீற்றிருக்கின்றனர். இதே கோலத்தில் தான் ராமரின் பட்டாபிஷேக காலத்தில், ராமருக்கு வலப்பக்கம் சீதையும், இடப்பக்கம் லட்சுமணனும் வீற்றிருந்தனர்.

நம்பிக்கைகள்:

அமர்ந்த நிலையில் அருளாட்சி செய்யும் ராமச்சந்திரனை தரிசித்தாலே பதவியும், புகழும் தானே தேடி வரும். பொறுமையின் சின்னமான, பூமாதேவியின் அவதாரமான சீதையை வணங்கும் பெண்களும் சீதையாக ஆகி விடலாம்.

சிறப்பு அம்சங்கள்:

                ராமரின் ஜாதகம் அமைவது போல் ஒருவருக்கு அமைவது மிகவும் அரிது. இவரது படத்தை வீட்டில் வைத்துத் வழிபட்டாலே போதும். நமது கிரக தோஷங்கள் எல்லாம் விலகி ஓடும். ராமன் ஏக பத்தினி விரதன் அனுமன் பிரம்மச்சாரி. ராமன் தன் மனைவியை தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். அனுமனோ அனைத்துத் பெண்களையும் சீதையைப் போல ஒரு தாயாக கருதுவான். இப்படிப்பட்ட இருவரையும் ஒரே சன்னதியில் தரிசித்துத் வந்தால், ஒருவனுக்கு பிடிக்கப்பட்டிருக்கும் பெண் மீதான ஆசை விலகிவிடும்.

ராமாயணத்தில், கோசலைக்கு பிறந்தவர் ராமர்.  தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவர் மூலமாகவே நான்கு பிள்ளைகளை பெற முடியம். ஆனால் அவர் மூன்று பெண்களை மணந்து நான்கு பிள்ளைகளை பெற்றார். ஆனால் கைகேயின் சொல்லைக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி, புத்திர சோகத்தினால் தன் இன்னுயிரையே இழந்தார். இதே போலத்தான் ராவணனும் நல்லவனாக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் பெண்ணாசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை ராமரின் வரலாறு எடுத்துத்க்காட்டுகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க ராமர், ராவணவதம் முடிந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டது போல் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.

கங்கையின் புண்ணியம் : காசிமாநகரில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிக புண்ணிய நதியாகிறது. இதேபோல் விளாச்சேரியிலும் வைகை நதி வடக்கிலிருந்து தெற்கே செல்வதால் மிகவும் புனிதமாகிறது. இங்கு குளித்துத் பட்டாட் பிஷேக ராமரை தரிசித்தாலோ, பலன் ஒன்றுக்கு பல மடங்கு கிடைக்கிறது.

விளாச்சேரி : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் விளா பூஜை நடக்கும், இந்த விளா பூஜைக்கு விளாமரங்கள் அடர்ந்த இந்த ஊரில் இருந்து தான் கோயில் நெல் கொண்டு செல்வார்கள் இதனாலேயே இந்த ஊர் விளாச்சேரி ஆனது. வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊர் இது. தமிழ்ப்புலமை பெற்ற பரிதிமால் கலைஞர் பிறந்தது இந்த ஊரில் தான். முக்கோண வடிவமுடைய இந்த ஊரில் கிட்டத்தட்ட 60 கணபாடிகள் வாழ்ந்திருக்கின்றனர்.

இந்த ஊரில் பட்டாபிஷேக ராமருடன், விநாயகர், காசிவிஸ்வநாதர் விசாலாட்சி, மாமுண்டி ஐயன், கருப்புசாமி, அழகு நாச்சியார், தட்சிணா மூர்த்தி, பூரணைபுஷ்கலை சமேத ஐயனார் ஆதிசிவன் ஆகியோர் தனித்தனி கோயில்களில் அருள்பாலிக்கின்றனர். ஊருக்கு ஒரு கோயில் இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஊர் முழுவதும் கோயில் இருப்பதை விளாச்சேரியில் காணலாம்.

திருவிழாக்கள்:

                ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக தனித்தனி காலங்களில் சிறப்பாக திருவிழா நடக்கும். அதேபோல் ஜாதி பேதம் இல்லாமல் திருவிழா கொண்டாடப்படும் பழக்கம் இன்றும் கூட இந்த ஊரில் உண்டு.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விளாச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பரங்குன்றம், மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top