விடங்கலூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
விடங்கலூர் சிவன்கோயில்,
கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207
கண்ணப்பா குருக்கள் 8903104895
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கீழ்வேளுரின் தெற்கில் சாட்டியக்குடி சாலையில் 13கிமீ தூரத்தில் உள்ளது விடங்கலூர். இது ஒரு தேவார வைப்பு தலம் என்பது கேட்கவே வியப்பான ஒன்றாக உள்ளது. அவ்வளவு எளிமையான ஒரு கோயிலாக உள்ளது. சுந்தரர் பாடிய தளம் என்பது சிறப்பு. அப்படிஎன்றால் இது ஒன்பதாம் நூற்றாண்டினை சேர்ந்த கோயில் ஆயிரம் வருடங்கள் கடந்து நிற்கிறது. அருமையான சோழ கட்டுமானம். பெரிய வளாகத்தில் கோயில் உள்ளது. சிதைவடைந்து கிடந்த கோயிலை மீட்டெடுத்து கட்டியுள்ளனர். ஆனாலும் அதன் அழகு குறையாமல் நிற்கிறது.
புராண முக்கியத்துவம் :
பிரஸ்தரம் எனப்படும் மேல் தளம் வரை கருங்கல் கொண்டும் அதன் மேல் விமானம் செங்கல் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம் தரை தளம் வரை கருங்கல் கொண்டுள்ளது. கோஷ்ட மூர்த்திகளில் தென்முகன், மற்றும் துர்க்கை மட்டும் உள்ளனர். பிற மாடங்கள் காலியாக உள்ளன. விநாயகர் முருகன் இருவருக்கும் தனி சிற்றாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி தெற்கு நோக்கிய சத்யதாக்ஷி இறைவன் முன்னர் ஒரு அர்த்தமண்டபம் உள்ளது முகப்பு மண்டபம் இல்லை ஒரு கல்நார் கொட்டகை போடப்பட்டுள்ளது. அதன் வெளியில் நந்தி மண்டபமும் கொடிமர மேடையும் கொடிமர விநாயகரும் உள்ளனர். அகத்தியர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர் எனவும். விடங்கர் எனும் முனிவர் இங்கே தங்கி வழிபட்டதால் இவ்வூருக்கு விடங்கலூர் எனப்படுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விடங்கலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி