வாழ்குடி விசுவநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
வாழ்குடி விசுவநாதர் சிவன்கோயில்,
வாழ்குடி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
விசுவநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரியில் இருந்து நாகூர் சாலையில் விற்குடி ரயில்வே கேட்டினை அடுத்து விற்குடி சாலை இடதுபுறம் திரும்புகிறது இதில் வாழ்குடி உள்ளது. ஊரின் வடகிழக்கில் தனித்து உள்ளது கோயில், இக்கோயிலில் இறைவன் விசுவநாதர். இறைவி விசாலாட்சி திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சனி பகவான் சன்னதிகள் உள்ளன. காஞ்சிப் பெரியவர் வழிபட்ட தலம். பல சிறப்புக்களை உடைய தலம் ஆயினும் போதிய பக்தர்கள் வந்து செல்வதில்லை. இப்போது போதிய பராமரிப்பின்றி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
திருவிற்குடியில் ஜலந்தாசுரனை அழிக்க சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். இந்த சக்கரத்தை பெயர்த்து எடுத்து உன் தலையில் வைக்க முடியுமா என கேட்க ஜலந்தசுரனும் அதனை பெயர்த்து தலையில் வைக்கிறான், அது அவனை இரண்டாக பிளக்கிறது, ஆனால் பிருந்தையின் கற்புநெறி அவனை உயிர்போகாமல் காக்கிறது. இந்த நேரத்தில் திருமால் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை வீடு செல்கிறார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. அதே நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. திருமால் பிருந்தையின் பால் காதல் கொண்டு நெகிழ்ந்த நிலையில் கையில் உள்ள ஐம்படைகளும் திக்கிற்கு ஒன்றாக விழுந்த போது, வில் விழுந்த இடம் விற்குடி எனவும் வாள் விழுந்த இடம் வாழ்குடி எனவும் அழைக்கப்பட்டது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வாழ்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி