வரிச்சியூர் சிவன்க்கோயில், மதுரை
முகவரி
வரிச்சியூர் சிவன்க்கோயில், வரிச்சியூர், குன்னத்தூர், மதுரை மாவட்டம் – 625020
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சென்னையிலிருந்து 444 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. குடைவரையிலிருந்து குன்றின் உச்சிப் பகுதிக்கு சற்று சரிவான பாறைப் பகுதி வழியாக சென்றால், சிதலமடைந்த நிலையில் கோயில் உள்ளது. கோயிலின் சுற்றுச்சுவர்கள் இடிந்த நிலையில் சில இடங்களில் மட்டும் காரை பெயர்ந்த நிலையில் உள்ள செங்கற்கள் காணப்பட்டன. செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய செங்கற்களின் வடிவத்தை போல் இல்லாமல் சற்று நீளமானதாகவும் அகலமானதாகவும் காணப்பட்டது. இதன்மூலம் இக்கோயில் மிகப் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இங்கு தொல்லியல்துறையின் அறிவிப்புப்பலகை ஏதும் இல்லை. எனவே தொல்லியல் துறையினரால் இக்கோயில் கண்டறியப்பட்டதா என தெரியவில்லை.
புராண முக்கியத்துவம்
கோயிலின் அடித்தளம் சிதைவடையாமல் இருக்கின்றது. இங்கும் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், கோயில் கருவறை அமைந்துள்ள இடத்திற்கு நேர் எதிரே நந்தி சிலை ஒன்று வணங்கிய நிலையிலும் கோயிலின் பின்புறத்தில் நீர் வெளியேறும் வழியும் உள்ளது. நந்திச் சிலைக்கு சற்று பின்னால் கல்லிலான விளக்குத்தூண் ஒன்றும் உள்ளது. கோயிலின் கருவறை கற்தூண்கள், வாயில் தூண்கள் சில உடைந்த நிலையிலும், கற்ச்சிலை ஒன்று உடைந்த நிலையிலும் காணப்பட்டது. சிலையில் காணப்படும் உருவத்தையும் இக்குன்றிக்கு “சுப்பிரமணியர் மலை” என்ற பெயரையும் வைத்து பார்கையில், இக்கற்சிலை முருகப் பெருமானின் கற்சிலையாக இருக்க வேண்டும். இக்கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்திருந்தது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வரிச்சியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை