Tuesday Jan 21, 2025

வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் திருக்கோயில், மதுரை

முகவரி

வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் திருக்கோயில், வரிச்சியூர், குன்னத்தூர், மதுரை மாவட்டம் – 625020

இறைவன்

இறைவன்: அஸ்தகிரீஸ்வரர்

அறிமுகம்

சென்னையிலிருந்து 444 கி.மீ தொலைவிலும் மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது .வரிச்சியூர் மலையில் மேற்கு சரிவில் சிவபெருமானுக்காக இரண்டாவது குடைவரை கோயில். சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன் அஸ்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சூரியன் மறையும் போது ஒளிக்கதிர்கள் இக்குடைவரையில் உள்ள லிங்கத்தில் விழுவதால் இறைவன் அஸ்தகிரீஸ்வரர் எனப்படுகிறார். இவற்றின் காலமும் கி.பி 8-ஆம் நூற்றாண்டு ஆகும்.

புராண முக்கியத்துவம்

நாட்டிற்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் என்று இக்கோயிலை அமைத்தனர். அதனால், ஆட்சி செய்ய ஆரம்பிக்கும் பருவத்தில் உள்ள இளவரசர்கள் இக்கோயிலில் வழிபடுவது வழக்கம். மேற்கு நோக்கிய அஸ்தகிரீஸ்வரர் கோயில் ஆட்சி காலமும் முடியும் நிலையில் அதாவது அஸ்தமனம் ஆகும் நிலையில் உள்ள வயதான அரசர்கள் வழிபட இக்கோயில் குடையப்பட்டது.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வரிச்சியூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top