வரிச்சிகுடி அகத்தீஸ்வர சுவாமி சிவன்கோயில், காரைக்கால்

முகவரி
வரிச்சிகுடி அகத்தீஸ்வர சுவாமி சிவன்கோயில், கோட்டுச்சேரி கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609609.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வர சுவாமி இறைவி: ஞானாம்பிகை
அறிமுகம்
இவ்வூர் காரைக்காலுக்கு வடகிழக்கே 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. பொறையாறு – காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடிஎன கேட்டு இறங்கலாம். வெட்சி எனும் செந்நிற பூக்கள் நிறைந்த பகுதி என்பதால் வெட்சி குடி எனப்பட்டு வரிச்சிகுடிஆனது எனலாம். பிரதான சாலையான NH32ல் உள்ள வரிச்சிகுடி Primary Health Centre எதிரில் மேற்கு நோக்கி செல்லும் சாலையில் ஒரு கி.மீ. தூரம் சென்றால் வரதராஜபெருமாள் கோயில் உள்ளது அதே தெருவின் வடக்கில் சில நூறு மீட்டர் தூரத்தில் சிவன்கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், கட்டுமானங்கள் இடிந்து மிகவும் சிதிலமடைந்த நிலையில் பல ஆண்டுகளாக இருந்துவந்தது. தற்போது முற்றிலும் இடிக்கப்பட்டு புதிய கோயில் கட்ட ஓராண்டின் முன்னம் பாலாலயம் நடைபெற்றது. தற்போது இறைவனும் இறைவியும் தனியாக ஒரு தகர கொட்டகையில் உள்ளனர். வேறு தெய்வங்கள் ஏதும் இல்லை, # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வரிச்சிகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி