வத்தராயன்தெத்து சிவன்கோயில், கடலூர்
முகவரி :
வத்தராயன்தெத்து சிவன்கோயில்,
புவனகிரி வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608601.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
கஞ்சாறு என்பது மயிலாடுதுறை அருகில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் ஆகும். இந்த வத்தராயன்பெயரால் அமைந்த ஒரு திட்டு பகுதிதான் வெள்ளாற்றின் வடகரை பகுதியான வத்தராயன் தெத்து எனப்படுகிறது. சேத்தியாதோப்பு குறுக்குரோட்டில் இருந்து புவனகிரி சாலையில் மூன்று கிமி சென்றால் வத்தராயன்தெத்து நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஊர் தெற்கில் 2 கிமில் உள்ளது. வத்தராயன்திட்டு என்பது வத்தராயன்தெத்து ஆகிவிட்டது. பழமையான சிவன் கோயில் சிதைவடைந்து மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம் :
கஞ்சாறன் பஞ்சநதி முடிகொண்டானான வத்தராயன். சோழநாட்டுக் கஞ்சாறு என்னும் ஊரின் பஞ்சநதி வாணன் என்பவனுடைய மகன் முடிகொண்டான் என்பது இவனது இயற்பெயர். முதலாங் குலோத்துங்கசோழனுடைய படைத்தலைவர்களில் ஒருவன், குலோத்துங்கனால் வத்தராயன் (வச்சராயன்) என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப்பட்டவன்.”
பெரிய குளத்தின் தென் கரையில் கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை சிவன்கோயில் உள்ளது. கோயில் எதிரில் பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. அதனடியில் ஒரு விநாயகரும், பலிபீடமும் உள்ளன. இறைவன் கிழக்கு நோக்கி ஒரே கருவறையுடன் கூடிய கோயில் கொண்டு உள்ளார். அவரது வாயிலின் முன்னம் ஒரு நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு விநாயகரும், வள்ளிதெய்வானை சமேத முருகனும் கருவறை வாயிலில் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் சனிபகவான் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகனும், துர்க்கையும் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வத்தராயன்தெத்து
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி