Friday Nov 22, 2024

மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

மொரட்டாண்டி மகா சனீஸ்வர பகவான் (நவக்கிரக கோயில்) திருக்கோயில், மொரட்டாண்டி, விழுப்புரம் மாவட்டம் – 605101.

இறைவன்

இறைவன்: சனீஸ்வரர்

அறிமுகம்

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான மொரட்டாண்டியில் 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் நவக்கிரக பரிகார ஷேத்திரம் அமைந்துள்ளது. இது நவகிரக கோயில் என்றும் அழைக்கப்படுகிறது இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிரதான தெய்வமான சனிஸ்வரன் பகவான் உலகிலே மிக உயரமான சுமார் 27 அடி உயரமும், ஒவ்வொரு நவகிரகமும் சிலையும் 15 அடி உயரம் கொண்டவையாக அமைந்துள்ளது. அனைத்து நவக்கிரகங்களும் அவற்றின் வாகனங்களுடன் கூடிய பெரிய சிலைகளுடன் உள்ளது. நவகிரகங்களுடன் ஒப்பிடும்போது சூரியக் கடவுள் தனது முக்கியத்துவத்தை ஒத்த மையத்தில் அமைந்து இருக்கிறார்.

புராண முக்கியத்துவம்

அகத்திய மகிரிஷியின் சிஷ்யரும், காஸ்யப முனிவரின் சிஷ்ய பரம்பரையில் வந்தவருமான சிவ சிதம்பர கீதாராம் குருக்களின் மகன் சிவஸ்ரீ சிதம்பர கீதாராம் குருக்கள் கழுவெளி சித்தர் எனும் முரட்டாண்டி சித்தர். சித்தர் தவம் செய்த மொரட்டாண்டி கிராமத்தில் உலக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய சித்தரின் கனவில் வந்து கூறியவாறு 54 அடி உயர கிரக சாந்தி கணபதிக்கு எதிரில் உலகிலேயே மிக உயரமான 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக மகா சனீஸ்வர பகவான் மற்றும் 108 திவ்ய விருட்சங்களுக்கு (மரங்கள்) நடுவில் 12 அடி உயர நவக்கிரகங்கள் மற்றும் 9 அடி உயர சொர்ண சிதம்பர மகா கணபதி, 9 அடி உயர ஜெயமங்கள சர்வ ரோக ருண விமோசன சத்ரு சம்கார சண்முக சுப்ரமணிய சுவாமி, 80 அடி உயர மகர கும்ப கோபுரம், துர்கா கணபதி ஷேத்ரபாலகர், அபயங்கரர், வாஸ்து புருஷன் முதலிய தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், வியாபாரத்தடை அகலும், குடும்ப பிரச்னை, தார தோஷம் உள்ளிட்டவை தீரும் என நம்பப்படுகிறது. மேலும் பல நன்மைகள் கிட்டும் எனவும் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

சனிபெயர்ச்சி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மொரட்டாண்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாண்டிச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top