மேலமாத்தூர் சொக்கநாதர் சிவன்கோயில்
முகவரி
மேலமாத்தூர் சொக்கநாதர் சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
இறைவன்
இறைவன்: சொக்கநாதர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி ஊருக்குள் நுழையும் இடத்தில் புறவழி சாலை பிரிகிறது. அங்கிருந்து மேற்கு நோக்கி மேலமாத்தூர் சாலை செல்கிறது, அதில் ஓலையாம்புத்தூர் வழி 5 கிமி தூரம் வந்தால் கீழமாத்தூர் அடுத்து மேலமாத்தூர் அடையலாம். கீழமாத்தூரிலும் சிவாலயம் உள்ளது. ஒரு ஓடை இரு ஊர்களையும் பிரிக்கிறது. மேலமாத்தூரில் இருந்த சிவாலயம் முற்றிலும் சிதைந்து காணாமலே போய்விட்டது காலத்தின் கோலம் தான். இங்கு முன்னொரு காலத்தில் மிக பெரிய கோயில் ஒன்றிருந்திருக்க கூடும். கோயில் ஒரு குளம் இரண்டையும் உள்ளடக்கியதாக மதில் சுவர்கள் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். அதன் சிதைவுகளாக கிடைத்தவை பெரிய சிவலிங்கமும் ஒரு அம்பிகையும் தான். குளக்கரையில் இருந்த அழகிய அம்பிகை சிலையை களவாணிகள் கொண்டு சென்றுவிட மீதம் இருந்த லிங்கத்திற்கு மட்டும் உள்ளுரில் பிறந்து வெளியூரில் வாழ்ந்து வரும் ஒரு அந்தணர் தன் செலவில் ஒரு தகரகொட்டகை போட்டு கொடுத்துள்ளார். இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார். எதிரில் புதுபொலிவுடன் கூடிய ஒரு அம்மன் கோயில் உள்ளது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலமாத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி