முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோயில், புதுச்சேரி
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2017-11-23-2-1.jpg)
முகவரி :
முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் திருக்கோயில், புதுச்சேரி
ராமகிருஷ்ணா நகர், முத்தியால்பேட்டை,
புதுச்சேரி – 605 003
தொலைபேசி: +91 413 226 0096 மொபைல்: +91 94431 04383
இறைவன்:
லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள்
இறைவி:
லட்சுமி
அறிமுகம்:
லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் கோயில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. திருவனந்தபுரம் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கும், செங்கல்பட்டு செட்டிபுண்ணிய லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கும் இடையே இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் கோயில் உள்ளது. புதுச்சேரி பிரதான பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவிலும், சென்னை விமான நிலையத்திலிருந்து 150 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
பகவான் விஷ்ணு, பிரளய காலத்தில் இந்த உலகையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை மேல் பாலகனாய் பிரளயகால சமுத்திரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகைப் படைப்பதற்காக தன் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மனை படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.ஒருமுறை பெருமாளின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்திவலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமாளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்மனிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங்களே படைப்புத்தொழில் புரிய ஆசைப்பட்டனர்.
குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந்து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்.வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரணடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம் வர, அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக்கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார். அசுரர்கள் கைபட்டதால் தங்களது பெருமை குன்றியதாக நினைத்த வேதங்கள், தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின.
குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்ரமாக இருந்த தாகவும், அவரை குளிர்விக்க மகாலட்சுமியை அவரது மடியில் ஸ்தாபிதம் செய்ததாகவும் கூறப்படுவதுண்டு. பின்னர் இவரை “லட்சுமிஹயக்ரீவர்’ என்றனர்.வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்தியிருக்கிறார
நம்பிக்கைகள்:
படிப்பில் மந்தம் உள்ளவர்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பேசும் திறனில் குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இத்தலப் பெருமாள் வலது கண்ணால் பக்தர்களையும், இடதுகண்ணால் லட்சுமியையும், தாயார் தன் வலது கண்ணால் பெருமாளையும், இடது கண்ணால் பக்தர்களையும் பார்த்த நிலையில் உள்ளனர். மூலவருக்கு கீழ் யந்திரம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோமளவல்லி தாயாரிடம் ஞானப்பால் அருந்திய, லட்சுமிகுமார தாத்த தேசிகர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் ராமாயணத்தை விடாது பாராயணம் செய்து, அனுமனை தரிசித்ததாக கூறுவர்.
மிகவும் பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் யோகஹயக்ரீவர் கோயிலுக்கும், செங்கல்பட்டு செட்டிப்புண்ணியம் யோகஹயக்ரீவர் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது.
திருவிழாக்கள்:
ஆவணி திருவோணத்தில் தேர்த்திருவிழாவும், அதற்கு 10 நாள் முன்பாக கொடியேற்ற நிகழ்ச்சியும்நடக்கிறது.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/23d3f961ffa96d13482e5428675c8148-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-11-23-1-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-11-23-2-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/2017-11-23-3.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/IMG_20180522_210750494_HDR-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/IMG_20190824_113135-1.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/IMG_20190824_113249-1.jpg)
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாண்டிச்சேரி
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி