Thursday Jan 09, 2025

மானாமதுரை வீரஅழகர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

அருள்மிகு வீரஅழகர் திருக்கோயில்,

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் – 630606.

இறைவன்:

வீரஅழகர்

அறிமுகம்:

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை அருகே அமைந்துள்ள வீர அழகர் பெருமாள் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. வடை மாலை – தென்னகத்தின் பிரபலமான உணவான வடையால் செய்யப்பட்ட மாலை – ஒரு மாதத்திற்குப் பிறகும் பழுதடைவதில்லை. இது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கி.பி 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் ஆகும். வானரப் படைகள் மீண்டும் சீதையைத் தேடத் தொடங்கியதால், இந்த இடம் வானர வீர மதுராபுரி என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் ஸ்தூல காரண புரி, சோமநாத புரம், வில்வ வனம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது மதுரையிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் வைகையின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் வைகை வடக்கு தெற்கு திசையில் பாய்கிறது.

புராண முக்கியத்துவம் :

 மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி,பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள். இத்திருக்கோயிலை மாவலி வாணாதிராயர் என்ற மன்னர் கட்டினார். மாவலி வாணாதிராயருக்கு தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் உண்டு.இந்த மன்னருக்கு மதுரை அழகர்கோவில் சுந்தர்ராஜப்பெருமாளிடத்தில் மிகுந்த பக்தி உண்டு. இந்த பெருமாளை பார்க்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய மாட்டார்.இந்நிலையில் ஒரு நாள் மன்னருக்கு சுந்தர்ராஜபெருமாளை பார்க்க செல்ல இயலாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பெருமாளை பார்க்க இயலாததால் மன்னர் மிகுந்த வேதனைப் பட்டார்.உடனே பெருமாள், மன்னரின் கனவில் தோன்றி, “”மன்னா, நீ இருக்கும் இடத்தில் வைகை ஆற்றின் கிழக்கு கரையில் எனக்கு ஒரு கோயில் கட்டி அதில் பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வா. இதனால் உனக்கு மதுரை அழகர்கோவிலில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்”என கூறி மறைந்தார்.மன்னனும் பெருமாள் கூறியபடி கோயில் கட்ட நினைத்தான். ஆனால் எந்த இடத்தில் கோயில் கட்டுவது என குழம்பி னான்.பெருமாள் மன்னனின் குழப்பம் தீர, ஒரு எலுமிச்சம்பழத்தை ஆற்றில் விட, அந்த எலுமிச்சம்பழத்தின் ஒரு பகுதி எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு கோயிலையும், மறுபாதி விழும் இடத்தில் கோயிலுக்கான குளத்தையும் வெட்டுமாறு ஆணையிட்டு மறைந்தார். எனவே தான் கோயிலிலிருந்து குளம் 4 கி.மீ. தூரத்தில் உள்ளது.

நம்பிக்கைகள்:

திருமணத்தடைநீங்க இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை வெற்றிலை மாலையும், காரியத்தடைநீங்க வியாழன், சனி கிழமைகளில் எலுமிச்சை மாலையும் இவருக்கு சாற்றலாம். அதேபோல் வறுமையை விரட்ட இங்குள்ள மகாலட்சுமிக்கு வெள்ளிகிழமைகளில் தாமரைத்திரியால் விளக்கு போட்டு வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பு அம்சங்கள்:

      பெருமாளைப்போலவே இங்கு அனுமன் மிக விசேஷம். இந்த அனுமனுக்கு சாற்றப்படும் வடை மாலை ஒருமாதம் ஆனாலும் கெடாது. ஆடித்திருவிழாவின் போது காஞ்சி வரதராஜப்பெருமாள் போல பெருமாள், தாயாரிடம் சென்று திருமணம் முடிப்பார். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெளிநாட்டு பக்தர்கள் அதிகம். மறுபடியும் ஒரு ராவணன் தோன்றி விடக்கூடாது என்பதற்காக இத்தல ஆஞ்சநேயர் தெற்கு முகமாக அருள்பாலிக்கிறார். சீதையை தேடிய வானர வீரர்கள் இங்குள்ள பிருந்தாவன் என்ற இடத்திலிருந்த மரத்தின் சுவை மிக்க கனிகளை உண்டதால் மயக்கம் உண்டகியது. ராமர் வந்து அவர்களை ஊக்கப்படுத்தி வீரவீர்களாக்கினார். எனவே தான் இத்தலம் வானரவீரமதுரை என பெயர் வந்தது. பின் அதுகவ மருவி மானாமதுரை ஆனது.

திருவிழாக்கள்:

மதுரை அழகர்கோவிலைப்போலவே, சித்திரை மாதம் 10 நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. 4ம்நாள் எதிர்சேவையும்,5ம் நாள் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பவுர்ணமியில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து, பகற்பத்து இக்கோயிலின் முக்கிய விசேஷங்களாகும்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மானாமதுரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

மானாமதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top