மஹுவா சிவன் – II கோவில், மத்தியப்பிரதேசம்
முகவரி
மஹுவா சிவன் – II கோவில், மஹுவா, மத்தியப்பிரதேசம் – 473990
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
மஹுவா சிவன் – II கோயில், இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மஹுவா என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹுவா கிராமம் அதன் மூன்று பழமையான கோவில்களுக்கு புகழ் பெற்றது. ரானோட் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மதுமதியே மஹுவாவாக இருக்கலாம்.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய இந்த கோவில் நாகரா கட்டிடக்கலை பாணியின் முன்மாதிரி. இது கருவறை, அந்தராளம் மற்றும் முக மண்டபத்தைக் கொண்டுள்ளது. பிருஹத் சம்ஹிதாவில் குறிப்பிடப்பட்டுள்ள வாஸ்துபுருஷமண்டலத்தின் 64 சதுரத் திட்டத்தை இந்த கோவில் கொண்டுள்ளது என்று மேஸ்டர் எழுதுயுள்ளார். இந்த 64 சதுர திட்டத்தின் 4 × 4 = 16 சதுரங்களை கருவறை கொண்டுள்ளது. பத்ரா-முக்கிய இடங்கள், பிரதிராதம் மற்றும் கர்ணன் போன்ற கோவிலின் பல்வேறு கூறுகளும் மேற்கூறிய உரையில் குறிப்பிட்ட பரிமாணங்களை உறுதிப்படுத்துகின்றன. இரண்டு பிரதிரதங்கள் மற்றும் இரண்டு கர்ணங்களுடன் கூடிய ஒற்றை பத்ராவின் வடிவமைப்பில், 2: 1: 2: 1: 2 என்ற விகிதத்தில், கோவில் பஞ்சரத வகைக்குள் வருகிறது. கோவில் கோபுரம் கிழக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் மோசமாக சேதமடைந்துள்ளது. கருவறை வாசலில் வழக்கமான நதி உருவங்கள் உள்ளன. வாசலில் ஐந்து குழுக்கள் உள்ளன, உள்நோக்கி, பத்ரா-சாகா, நாக-சாகா, பிரமதா-சாகா, ஸ்தம்பா-சகா மற்றும் பாஹ்யா-சகா உள்ளன.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மஹுவா
அருகிலுள்ள இரயில் நிலையம்
பதர்வாஸ்
அருகிலுள்ள விமான நிலையம்
பூபால்