மணக்கரம்பை காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
மணக்கரம்பை காசி விஸ்வநாதர் சிவன்கோயில்,
மணக்கரம்பை, திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613003.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
தஞ்சையின் வடக்கில் திருவையாறு சாலையில் 7 கிமீ தூரத்தில் உள்ளது மணக்கரம்பை. இங்கு கிழக்கு நோக்கிய சிறிய சிவன்கோயில் உள்ளது. கோயிலின் முகப்பில் பெரிய அரச மரம் ஒன்றுள்ளது அதன் கீழ் ஒரு விநாயகரும், நாகரும் சிறிய நந்தி ஒன்றும், சிதைவடைந்த அம்பிகை சிலை ஒன்றும் உள்ளன. இறைவன் – காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி இறைவன் கிழக்கும் இறைவி தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளனர் லிங்க மூர்த்தி நடுத்தர அளவில் உள்ளார். காசியில் இருந்து வந்த லிங்கம் என சொல்லப்பட்டாலும், அவ்விதம் இருக்காது என்றே தோன்றுகிறது.
முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது இந்த மண்டபத்தில் கருவறை வாயிலில் பெரிய விநாயகர் சிலை உள்ளது மறுபுறம் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார், இந்த மண்டபத்தின் வெளியில் வாயில் படி அருகில் ஒரு பெரிய விநாயகர் உள்ளார் மற்றும் சிறிய விநாயகர் சிறிய முருகன் சிலைகளும் உள்ளன. தென்கிழக்கில் ஒரு லிங்கமும் மூன்று லிங்க பாணங்களும் உள்ளன. வடகிழக்கில் பைரவர் சூரியன் சனி ஆகியோரும் நவக்கிரக மண்டபமும் உள்ளன. முகப்பு மண்டபத்தின் நேர் எதிரில் ஒரு நந்தி மண்டபம் உள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். வடக்கில் சண்டேசர் சன்னதியும் உள்ளது. அமைதியான கிராம சிவாலயம் பெரியதொரு கோயிலின் மீதம் இது என தோன்றுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணக்கரம்பை
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி