போலகம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
போலகம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில்,
போலகம், திருமலைராயன்பட்டினம் கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609606.
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
புவனேஸ்வரி
அறிமுகம்:
இந்த பகுதியில் போலகம் என்ற பெயரில் இரு ஊர்கள் உள்ளன. இவ்வூர் காரைக்கால் அருகில் உள்ளது. அதனால் திருமலைராயன்பட்டினம் போலகம் எனப்படுகிறது. சிவன் கோயில் ஊரில் இருந்து தனித்து தென்மேற்கில் உள்ளது. WARREE PV Technology என்ற சூரிய மின் ஆற்றல் நிறுவனம் இந்த கோயிலை மூன்று புறமும் சூழ்ந்துள்ளது. ஒருவேளை இந்த இடம் இக்கோயிலின் இடமாக இருக்கலாம், புதுச்சேரி அரசு இதனை இவர்களுக்கு கொடுத்திருக்கலாம். பல காலம் சிதைவடைந்து தனித்து ஒற்றை கருவறையாக இருந்த கோயிலை தற்போது செப்பனிட்டு புதிய மூர்த்திகள் மற்றும் சிற்றாலயங்களையும் அமைத்து வருகின்றனர்.
இறைவன்-பசுபதீஸ்வரர் இறைவி – புவனேஸ்வரி கிழக்கு நோக்கிய சிவன்கோயில் அதனை சுற்றி சிறிய பிரகாரத்துடன் மதில் சுவர் இருக்கிறது, இறைவன் எதிரில் அழகிய நந்தி முகத்தை தூக்கி வைத்த கோலத்தில் உள்ளது. தற்போது பெரிய வளாகமாக உருவாக்கப்பட்டு அம்பிகைக்கு தனி சிற்றாலயம் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. பின் பகுதியில் விநாயகர் முருகன் மகாலட்சுமி வைக்க சிற்றாலயங்கள் எழும்பி உள்ளன. ஒரு நீண்ட கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்த சப்தமாதர்களுடனான விநாயகர் சிலை உடைந்து போய் விநாயகரும் மாதர்களில் ஒருவரது உருவமும் மட்டுமே உள்ளது இருப்பினும் அதனையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”






காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமலைராயன்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி