Saturday Sep 28, 2024

பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

பொய்கைநல்லூர் நந்திநாதேஸ்வரர் திருக்கோயில், வடக்கு பொய்கைநல்லூர், பொய்யூர் அஞ்சல், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106

இறைவன்

இறைவன்: நந்திநாதேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி

அறிமுகம்

பொய்கைநல்லூர் மக்கள் வழக்கில் பொய்யூர் என்று வழங்குகின்றது. இவ்வூர் வடக்குப் பொய்கை நல்லூர், தெற்குப் பொய்கை நல்லூர் என இரண்டாகவுள்ளது. இதில் வடக்குப் பொய்கை நல்லூரே வைப்புத் தலமாகும். நாகப்பட்டிணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஈச்சங்குப்பம், அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் உள்ளது. ஆலயம் வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் சாலை ஓரத்திலேயே உள்ளது. அருகில் கோரக்க சித்தர் கோவிலும் உள்ளது. இத்தல இறைவன் நந்திநாதேஸ்வரர் என்றும் இறைவி செளந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.

புராண முக்கியத்துவம்

ஒருசமயம் விசுவாமித்திர முனிவர் கைலாயத்தின் அந்தப்புரம் வரை சென்று இறைவனை சந்தித்து பல வரங்களைப் பெற்று விடுகிறார். சிவபெருமான் தனது ஞானதிருஷ்டியால் ஆராய்ந்தபோது திருநந்திதேவர் காவல் பணியை சரியாக செய்யவில்லை என்று புரிந்து கொண்டார். உடனே சிவபெருமான் நந்தி தேவருக்கு நீ பூலோகம் சென்று ஆயிரம் ஆண்டுகள் என்னை நோக்கி தவம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார். நந்திதேவர் சிவபெருமானிடம் நான் பூலோகம் சென்று தங்களை நோக்கி தவம் செய்ய ஒரு இடத்தை தாங்களே சொல்லுங்கள் என்று கேட்டார், அதற்கு சிவபெருமான் காட்டிய இடம் தான் வடக்கு பொய்கை நல்லூர்நந்தி நாதேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடம். எனவே பிரதோஷ வழிபாடு செய்ய மிகச்சிறந்த சிவாலயம் வடக்கு பொய்கை நல்லூர் ஸ்ரீ நந்தீஸ்வரர் ஆலயம் ஆகும். கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த தலம். சித்தர்கள் பலரும் வழிபட்டு முக்திபெற்றதால் இத்தலம் ‘சித்தாச்சிரம்’ எனப் போற்றப்படுகிறது. நந்தி, மாகாளர் பூஜித்த தலமாகும். கோரக்க சித்தருக்கு இறைவன் காட்சி தந்த விழா ஐப்பதி பரணியில் நடைபெறுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top