Monday Nov 25, 2024

பெருமன்ட்டுநல்லூர் ஸ்ரீ ஆதிமஹாலிங்கேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

பெருமன்ட்டுநல்லூர் ஸ்ரீ ஆதிமஹாலிங்கேஸ்வரர் சிவன்கோயில், பெருமன்ட்டுநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 202.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ஆதிமஹாலிங்கேஸ்வரர் இறைவி: ஸ்ரீ அமிர்தநாயகி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ளது இந்த பெருமன்ட்டுநல்லூர் கிராமம். வெட்டவெளியில் இருந்து தற்போது சிறிய சீட் கொட்டகையில் வைக்கப் பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ விநாயகர், மற்றும் இரண்டு நந்திகள் இருக்கின்றன. மூலவரை ஸ்ரீ ஆதிமஹாலிங்கேஸ்வரர் என்றும் அம்பாளை ஸ்ரீ மகேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆலயத்தின் அருகே குளம் ஒன்று உள்ளது. ஆனால் அது தற்ப்போது நீர் இல்லாமல் காய்ந்து வறண்டு போய் உள்ளது. ஆலயத்தின் வடபுறம் ஒரே வேர் பாகத்தில் இரு வேப்ப மரங்கள் இருக்கின்றன. அதில் ஓன்று ஆண் மரம் மற்றது பெண் மரம் என்று சொல்லப்படுகிறது. இலைகளில் வித்தியாசம் காணப்படுகிறது. திருக்குளம் அருகில் உள்ளது. தொடர்புக்கு திரு மோகன்-9710501376, திரு கண்ணபிரான்- 9789842681, திரு மூர்த்தி-9940674356 பேருந்து தாம்பரம்-கன்னிவாக்கம் 55T. ஸ்ரீராம் அப்பார்ட்மெண்ட் அருகில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெருமன்ட்டுநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஊரப்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top