பெருந்தரக்குடி-மேப்பலம் விஸ்வலிங்க வைத்தியநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பெருந்தரக்குடி-மேப்பலம் விஸ்வலிங்க வைத்தியநாதர் சிவன்கோயில்,
பெருந்தரக்குடி-மேப்பலம், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613704.
இறைவன்:
விஸ்வலிங்க வைத்தியநாதர்
இறைவி:
ஞானாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து மன்னார்குடி சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது மேப்பலம் நிறுத்தம் இங்கிருந்து கிழக்காக செல்லும் புலிவலம் சாலையில் திரும்பினால் சில நூறு மீட்டர்களில் உள்ளது சிவன்கோயில். இவ்விடம் மேப்பலம் / பெருந்தரக்குடி என அழைக்கின்றனர். இங்கு சாலை ஓரத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோயில் உள்ளது, நான்கு புறமும் சுற்று சுவர் கொண்ட கோயில், தென்புறம் சாலை செல்வதால் தென்புறம் வாயில் உள்ளது. இக்கோயில் சுப்பு அறக்கட்டளை ஒன்றுக்கு சொந்தமானதாகும், இறைவன் – விஸ்வலிங்க வைத்தியநாதர் இறைவி – ஞானாம்பிகை கிழக்கு நோக்கிய சிவன், தெற்கு நோக்கிய அம்பிகை இரு கருவறைகளும் சிறியதாக அழகாக கட்டப்பட்டு உள்ளன.
முகப்பில் திறந்த மண்டபம் உள்ளது. அதில் நந்தி பலிபீடம் உள்ளது. கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை என சிறிய அளவில் உளள்னர். பிரகார சிற்றாலயங்கள் வினாயகர் முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு அமைந்துள்ளது. சண்டேசர் கோமுகத்தின் அருகில் கோயில் கொண்டுள்ளார். வடகிழக்கில் நவகிரகங்கள் இறைவனின் எதிரில் உள்ள மதில் சுவரை ஒட்டி பைரவர் சூரியன் சந்திரன் ஆகியோருக்கு மாடங்கள் உளளன. வடக்கு நோக்கிய ராகு துர்க்கையம்மன் தனி சிற்றாலயத்தில் உள்ளார். சிறிய கோயில் நல்ல பராமரிப்பில் உள்ளது. ஊரை விட்டு தனித்து உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேப்பலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி