பெரியகண்ணமங்கலம் காலஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
பெரியகண்ணமங்கலம் காலஹஸ்தீஸ்வரர் சிவன்கோயில்,
பெரியகண்ணமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610101.
இறைவன்:
காலஹஸ்தீஸ்வரர்
இறைவி:
ஞானாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரின் வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் செல்லும் வளப்பாற்றின் வடகரையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் பெரியகண்ணமங்கலம் அடையலாம். ஒருகாலத்தில் நாகங்கள் வழிபட்டதால் இவ்வூர் இறைவனுக்கு காளஹஸ்தீஸ்வரர் என பெயர், கிழக்கு நோக்கி பரிவாரங்களுடன் கோயில் கொண்டிருந்த எம்பெருமானின் கோயில் முற்றிலும் இடிந்து சிதைந்துவிட மக்கள் அனைவரையும் ஒரு தகர கொட்டகைக்கு கொண்டுவந்துவிட்டனர். இறைவன் காலஹஸ்தீஸ்வரர் பெரிய லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி உள்ளார் அவரின் முன்னர் ஒரு நந்தி உள்ளது இறைவி ஞானாம்பிகை, வள்ளி/தெய்வானை சமேத முருகன் தென்முகன் சண்டேசர் பைரவர் ஒருபுறமும் செல்வவிநாயகர் சித்திவிநாயகர் என இரு விநாயகர்கள் நாராயணபெருமாள் ஒருபுறமும் என அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நாட்களை கடத்தி வருகின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியகண்ணமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி