Friday Dec 27, 2024

பெண்கள் அங்கப் பிரத்ட்சணம் செய்யலாமா?

  1. துவியாங்க நமஸ்காரம் ( இரு கைகளையும் கூட்டி வணங்குதல்),
  2. திரியாங்க நமஸ்காரம் ( கைகள் இரண்டையும் குவித்துத் தலையையும் தாழ்த்தி வணங்குதல்,
  3. பஞ்சாங்க நமஸ்காரம் (கை இரண்டு, முழந்தாள் இரண்டு, சிரசு என்னும் ஐந்து அங்கங்கள் தரையில் பட வணங்குதல்)
  4. சாஷ்டாங்க நமஸ்காரம் ( மேற்கூறியவற்றுடன் வயிறும் சேர்த்து ஆறு அங்கங்கள் தரையில் பட வணங்குதல்).
  5. அட்டாங்க நமஸ்காரம் ( மேற்கூறியவற்றுடன் தோள் செவி ஆகியவற்றையும் சேர்த்து எட்டு அங்கங்கள் தரையில் பட வணங்குதல்,
  6. சாங்கோபாங்க நமஸ்காரம் ( கண்டவுடன் கை, மற்றும் உடலில் உள்ள தண்டம், பை, பொருட்கள் யாவும் விழ அடியற்ற மரம் தனது கிளை, இலை, காய், பூ, பழங்களுடன் விழுவதுபோலத் தரையில் விழுந்து வணங்குதல் இவை ஏழும் ஆண்கள் செய்யலாம். பெண்களுக்கு சாஷ்டாங்க, அஷ்டாங்க, சாங்கோபாங்க நமஸ்காரங்கள் விதிக்கப்படவில்லை. ஏகாங்க நமஸ்காரம் ( ஒற்றைக் கையினால் வணங்குதல், உடம்பை மட்டும் குனிந்து வணங்குதல்) எக்காலத்தும் யாருக்கும் விலக்கப்பட்டவையாம்.
    அரசவையிலும், ஆலயத்திலும் குருவுக்கு வணக்கம் செய்யக்கூடாது. அரசவையில் அரசனே வணக்கத்துக்குரியவர்; ஆலயத்தில் இறைவனே வணக்கத்துக்கு உரியவன். ஆலயங்களில் ஆச்சாரிய உற்சவம் இதற்கு விதிவிலக்கு. தாய்மையின் அங்கங்களாக கர்ப்பத்தை உள்வாங்கி வழங்கும் இடுப்பு, சுமக்கும் திருவயிறு, பால் தரும் மார்பு மூன்றும் எக்காலமும் தரையில் படக்கூடாது, யாரையும் பணியக்கூடாது, வணங்க்கக்கூடாது என்பது ஸ்மிருதிகளில் உள்ள விதி. தாய்மை எக்காலமும் வணக்கத்துக்குரியது.
    இவற்றுடன் புத்தகம், மணியின் நாக்கு, சங்கின் வயிறு, இல்லத்துக்கு வந்து புரோகிதம் செய்யும் புரோகிதரின் பிட்டம் இவை வெறும் தரையில் படலாகாது என்பது விதி. பெண்கள் குப்புறப் படுக்கக் கூடாது என்பதும் விதி.
    அங்கப் பிரதட்சணம் என்பது தாய்வழி நாட்டார் வழிபாட்டு மரபாகையால் அவை பற்றிய விதிகள் சமய நூல்களில் இல்லை. ஆயினும் தாய்மைக்கு கொடுக்கும் மதிப்பிற்காக நாம் பெண்களுக்கு அங்கப் பிரதட்சணம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
    ஈழத்துச் சைவ மரபிலும் பெண்கள் எக்காலத்தும் அங்கப்பிரதட்சணம் செய்வதில்லை. அடி அழித்தல் என்று ஒவ்வொரு அடிக்கும் அல்லது மூன்று அடிகளுக்கு ஒன்றாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்து வழிபடும் மரபு உள்ளது. தீபெத்திய பௌத்தர்கள் கைலாய யாத்திரையில் கைலையங்குன்றை இவ்வாறு வலம் வருவதை இன்றும் காணலாம்.
Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top