பூதங்குடி முக்கோடீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
பூதங்குடி முக்கோடீஸ்வரர் சிவன்கோயில்,
பூதங்குடி, மயிலாடுதுறை வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609204.
இறைவன்:
முக்கோடீஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
உயிரையும் மெய்-யையும் காக்கும் இறைவனின் இருப்பிடமே இந்த பூதங்குடி ஆகும். புத்தன் குடி என்பதே பூதங்குடி என ஆகியிருத்தல் வேண்டும். மணல்மேடு – பந்தநல்லூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ள கடலங்குடியின் தெற்கில் ஒரு கிமீ சென்றால் பூதங்குடி அடையலாம். சிறிய அழகான நான்கு தெருக்களை கொண்ட கிராமம். அதன் வடகிழக்கில் உள்ளது சிவன்கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை அவருக்கு இடப்பாகம் கொண்டு அவரும் கிழக்கு நோக்கியும் உள்ளார். இறைவன் – முக்கோடீஸ்வரர் இறைவி – மீனாட்சி இறைவன் இறைவி இரு சன்னதிகளையும் ஒரு நீண்ட மண்டபம் இணைக்கிறது, அதில் இருவரையும் நந்தி நோக்கியபடி அமர்ந்துள்ளது. கருவறை வாயிலில் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை உள்ளனர். கோமுகத்தின் அருகில் சண்டேசர் சன்னதி உள்ளது. வடகிழக்கில் சனி பைரவர் நாகர் சிலைகள் உள்ளன. கிராமத்து கோயில் என்றாலும் எளிமையான பூஜைகளுடன் காலம் செல்கிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூதங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி