பூங்காவூர் பூங்காவனநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
பூங்காவூர் பூங்காவனநாதர் சிவன்கோயில்,
பூங்காவூர், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612610.
இறைவன்:
பூங்காவனநாதர்
இறைவி:
மலர்மங்கை
அறிமுகம்:
எண்கண் ஊரின் மேற்கில் ஒன்றரை கிமீ தூரத்தில் உள்ளது பூங்காவூர். சிமிழி ஊராட்சி தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது சிமிழியின் வரலாற்று பெயர் “சேழுசிபுரம்” என்பதாகும். இவ்வூரின் நடுவே “சோழசூடாமணி” ஆறு பாய்கிறது. என்கண்-ல் இருந்து நெய்குப்பை செல்லும் சாலையில் ஒரு கிமீ சென்றதும், இடதுபுறம் திரும்பி பூங்காவூர் செல்லவேண்டும். இங்கு ஊரின் தென்புறம் சிறிய சிவாலயம் ஒன்று சிதைந்து போய் கிடந்ததை ஊர்மக்கள் சிறிய தகர கொட்டகை கொண்டு சிவாலயம் அமைத்துள்ளனர். இறைவன் இறைவி இருவரும் கிழக்கு நோக்கி வைக்கப்பட்டுள்ளனர். இறைவனின் எதிரில் பழமையான நந்தி ஒன்றுள்ளது. தென்புறம் தட்சணாமூர்த்தி சிலை ஒன்று உடைந்து கிடக்கிறது. கோயிலின் பின் புறம் பெரிய வில்வமரம் உள்ளது. இறைவன்- பூங்காவனநாதர் இறைவி- மலர்மங்கை
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூங்காவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி