பிர்லா மந்திர், ஐதராபாத்
முகவரி
பிர்லா மந்திர், அம்பேத்கர் காலனி, ஐதராபாத், தெலுங்கானா – 500063.
இறைவன்
இறைவன்: வெங்கடேஸ்வரர் இறைவி: பத்மாவதி, ஆண்டாள்
அறிமுகம்
பிர்லா மந்திர் என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். இது உசைனிசாகர் ஏரியின் தென்கரையில் உள்ள சிறு குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலின் மேல்தளத்திலிருந்து நகரின் முழுத் தோற்றத்தினைக் காணலாம். படிக்கட்டுகளின் வழியாக மூலவர் சன்னிதியினை அடைந்தால், அங்கு திருப்பதியில் உள்ளது போன்ற வெங்கடேசபெருமாளை தரிசிக்கலாம். முழுக் கோவிலும் நுட்பமான கலைநயமிக்க சிற்பங்களால் நிறைந்து காணப்படுகிறது. இச்சிற்பங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நிகழ்வுகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. மேலும் பல இந்து- ஆண், பெண் தெய்வங்களின் உருவங்களும் உள்ளன. இதன் அருகில் பிர்லா கோளரங்கமும் அறிவியல் காட்சியகமும் இருக்கின்றன. காட்சிகள் ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அமைக்கப்பட்டள்ளன. லும்பினி பூங்காவும் அருகிலேயே உள்ளது. ஐதராபாத் இரயில் நிலையத்திலிருந்து அதிகத் தொலைவில் இல்லை. மாநில சட்டசபையும் ஓர் அருங்காட்சியகமும் அப்பகுதியில் காண வேண்டியவையாகும்.
புராண முக்கியத்துவம்
. நௌபாத் பஹாட் எனும் இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் முக்கிய ஆன்மீகத்திருத்தலமாக புகழ் பெற்று விளங்குகிறது. முக்கியமாக வெங்கடேஸ்வரா கடவுளை வணங்கும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விரும்பி வருகை தருகின்றனர். 10 வருட காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட இந்தகோயில் ராமகிருஷ்ணா மிஷணை சேர்ந்த ஸ்வாமி ரங்கநாதானந்தாவால் திறக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பிரத்யேக வரவழைக்கப்பட்ட வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருப்பது இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். அமைதியுடன் கூடிய தியானச்சூழல் நிலவவேண்டும் என்பதற்காக ஆலயமணிகள் இல்லாமலே உருவாக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் மற்றொரு விசேஷமாகும். மூலவரான வெங்கடேஸ்வரர் மட்டுமல்லாமல் இதர கடவுள் சிலைகளும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவன், விநாயகர், பிரம்மா, சாய்பாபா, ஷக்தி, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய கடவுள்களுக்கு தனித்தனி சன்னதிகள் பிர்லா மந்திர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோயிலின் சுவர்ப்பகுதிகளில் குரு கோவிந்த் சிங் உள்ளிட்ட பல்வேறு ஞானிகளின் போதனைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
காலம்
5000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஐதரபாத்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஐதரபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
ஐதரபாத்