Thursday Jan 23, 2025

பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில், விழுப்புரம்

முகவரி

பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 605203 தொலைபேசி மொபைல் 9751624822

இறைவன்

இறைவன்: பாடலீஸ்வரர்

அறிமுகம்

திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ‘பேரணியில்’ இருந்து 10 கிலோ மீட்டர் உட்புறமாக அமைந்துள்ளது ‘பிரம்மதேசம்’ எனும் கிராமம். இங்குதான் 1000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த சிவன் ஆலயங்கள் இரண்டு அமைந்துள்ளன. ஒன்று இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பாடலீஸ்வரர் திருக்கோயில். மற்றொன்று ஊரின் வடமேற்கு திசையில் ஏரிக்கரையின் ஓரமாக உள்ளது பிரமாண்டமான ‘பிரம்மபுரீஸ்வரர்’ ஆலயம். சோழ மன்னனான ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலய கல்வெட்டுகளில் ‘பாதாலீஸ்வரர் ஆலயம்’ என்று குறிப்பிடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில், மகாமண்டபம் காலப்போக்கில இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டது. ராஜராஜன், ‘பிடாரிபட்டு’ என்னும் கிராமத்தில் உள்ள ‘சப்தமாதர்கள்’ (ஏழுகன்னியர்) ஆலயத்துக்கு தானம் கொடுத்ததற்கான கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன. ஆலயத்தின் கருவறை வாயிலில் உள்ள 6 அடி உயரம் கொண்ட இரண்டு சிலைகள் பச்சை வண்ண கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. கருவறையின் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்து ஆலயத்தின் தொன்மையை விளக்குகின்றன. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தை மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடந்துவருகின்றன. எனவே, இங்கு வழிபாடுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பிரம்மதேசம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top