பழையநீடாமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/292524956_7666475636758813_8140628196047489053_n.jpg)
முகவரி :
பழையநீடாமங்கலம் சிவன்கோயில்,
பழையநீடாமங்கலம், நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614404.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சோழ மண்டலத்தின் பெரும்பாதையில் பல பிரிவுகள் ஒன்று சேரும் மைய புள்ளியாக விளங்கும் ஊர்களில் ஒன்றான நீடாமங்கலம் அப்போது வெண்ணிகூற்றத்தில் இருந்தது. பாமணி, வெண்ணாறு, கோரையாறு என மூன்று நதிகள் சுழித்தோடுவதற்க்கிடையில் உள்ள நிலம் தான் நீடாமங்கலம். மூன்று பக்கமும் நீர் அரணாக ஆறுகள் ஓட இவ்வூரை கோட்டை பகுதியாக ஒரு அரண்மனை கட்டி வசித்துவந்தார் மராட்டிய மன்னர். பிரதாபசிம்ம மகாராஜா இங்கு இரண்டு சிவன் கோயில்களையும் ஒரு வைணவ கோயிலையும், ஒரு சத்திரத்தினையும் 1761 ல் கட்டினார்.
மகாராஜா பிரதாப சிம்மன் கட்டிய சிவாலயம் இப்போது ஊரின் கிழக்கு பகுதியில் பழையநீடாமங்கலம் என்ற பகுதியில் உள்ளது. வெண்ணாற்றை நோக்கியவாறு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சிவாலயம். கோயிலின் கட்டுமானம் மிக அழகான வெள்ளி சிமிழ் போல இருக்கிறது. முன்னூறு ஆண்டுகளே கடந்துள்ளன, அதற்குள் சிதிலம் சிதைவு சீரழிவு. பல ஆயிரம் கைகளில் உருவான லட்சக்கணக்கான செங்கற்கள், பகுதி பகுதியாக விழுந்து கொண்டிருக்கிறது.
அரச மரங்கள் சடை சடையாய் வேர்களை இறக்கி நமது நெஞ்சை பிளக்கிறது. விரைவில் இறைவன் மேல் சரிந்துவிடுவேன், அந்த பாபத்தில் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் என ஒவ்வொரு செங்கல்லும் வருவோர் போவோரை வேண்டி நிற்கிறது. சரிந்த வாயில் கொண்ட கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவன் இன்னும் குடி கொண்டுள்ளார், செங்கற்களின் வேண்டுதலை ஏற்று அம்பிகை, சிலகாலம் முன்னரே தனது இருப்பிடத்தை காலி செய்துவிட்டார். தென்முகன் விநாயகர் முருகன் ஆகியோரும் இறைவன் முன்னர் உள்ள இடத்திற்கு வந்துவிட்டனர். முகப்பில் உயர்ந்த கருங்கல் தூண்கள் கொண்ட மகா மண்டபம் உள்ளது. அதற்க்கு வெளியில் நந்தி பாதுகாப்பு மிக்க ஒரு தனி மண்டபத்தில் பெருமூச்சுடன் அமர்ந்துள்ளார். சுற்றிவர வழியில்லை, அவ்வப்போது சிலர் உழவார பணிகள் செய்கின்றனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/291745706_7666476393425404_965509175104045281_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/291806465_7666476040092106_3595195524440638152_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/291938924_7666475560092154_8692613081731973350_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/291958620_7666475340092176_2597694994808750260_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/291984001_7666477146758662_1371528134350055985_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292057412_7666476743425369_1401806097649724449_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292172306_7666476816758695_4920977699690685146_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292232762_7666476266758750_112129230809857177_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292330277_7666475150092195_6049450309949854050_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292352681_7666475246758852_4687751238368209937_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292392627_7666477026758674_5598819412705394912_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292396485_7666474970092213_5207739724439765850_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292398518_7666474853425558_5142225657589730427_n.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/292524956_7666475636758813_8140628196047489053_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழையநீடாமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி