பந்தி ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
பந்தி ஈசான லிங்கேஸ்வரர் சிவன்கோயில்,
பந்தி, திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612605.
இறைவன்:
ஈசான லிங்கேஸ்வரர்
அறிமுகம்:
திருச்சேறையின் மேற்கில் ஒரு கிமீ. சென்றால் பந்தி கிராமம். இங்கே பெரிய கோயில் என்று எதுவும் காணப்படவில்லை. சிறிய தெரு ஒன்றில் தகரகொட்டகை கோயில் ஒன்றில் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். எதிரில் நந்தி ஒன்றுள்ளது. இங்கே இறைவனின் பெயர் ஈசான லிங்கேஸ்வரர் .
பார்வதிதேவி சிவபெருமானின் சாபத்தால் காட்டில் வனப்பேச்சியம்மனாக அவதாரம் எடுத்தாள். .சிவபெருமானே பேச்சியம்மனுக்கு மகனாக சுடலை மாடன் ரூபம் கொண்டார். இருவரும் பூலோகம் சென்று மக்களை காக்கும் தொழிலினை மேற்கொண்டனர். 21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக இருக்கிறாள். சக்தி அம்சத்தில் சிவன் அடக்கம் என்பதால் பேச்சியம்மன் எல்லா 21 பந்தி தெய்வங்களில் முதன்மையான காவல்காரியாக மக்களுக்கு அருள்புரிகிறார். திரிசூலம், பிரம்பு, கபால பாத்திரம், கத்தி, வாள், சீலைப்பிள்ளை, கிலுக்கு, உடுக்கை, மண்டையோடு, சாட்டை என சிவனது ஆயுதங்களை கொண்டவள். பார்வதி இப்படி பந்தி தெய்வமாக வீற்றிருக்கும் இடம் இந்த பந்தி கிராமம் என கூறப்படுகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பந்தி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவிடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி