நாகூர் கவரதெரு வடக்குநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கவரதெரு வடக்குநாதர் திருக்கோயில்,
கவரதெரு, நாகூர்
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
வடக்குநாதர்
அறிமுகம்:
நாகூர் பகுதியில் இருந்து நாகை நகருக்குள் நுழையும் இடத்தில் உள்ள பீச்ரோடு ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி பிரிகிறது கவர-தெரு, இந்த தெருவின் கடைசியில் உள்ளது வடக்குநாதர் கோயில் எனப்படும் தட்சணாமூர்த்தி சுவாமிகள் கோயில் தட்சணாமூர்த்திசுவாமிகள் மடம் எனப்படுகிறது. அங்கிருக்கும் லிங்கம் அவர் வழிபட்ட லிங்கமூர்த்தமாகலாம். எனினும் ஏன் வடக்கு நோக்கி உள்ளது என அறியமுடியவில்லை. ஒரு கிரவுண்ட் இடத்தில் வடக்கு நோக்கி கட்டப்பட்ட சிறிய விமானத்துடன் கூடிய கருவறையும் அதனுள் ஒரு நடுத்தர அளவுடைய லிங்கமும் உள்ளது. கருவறை முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது. கருவறை வாயிலில் சிறிய விநாயகர் பெருமாள் கங்கையம்மன் முருகன் உள்ளனர்.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி